காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது நிச்சயம் தாக்குதல் தொடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் காஷ்மீர் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், அசாம் மாநிலம் சென்ற பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, புல்வாமா தாக்குதல் குறித்து பேசுகையில், "பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் இந்த கோழைத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்களின் தியாகம் வீண் போகாது. ஏனென்றால் மத்தியில் காங்கிரஸ் அரசு இல்லை. இது பாஜக அரசு. எந்த ஒரு பாதுகாப்பு பிரச்னையிலும் இந்த அரசு சமரசம் செய்து கொள்ளாது," என்றார்.