ராஜ்காட் (குஜராத்): தமன் 1 சர்ச்சை முடிவதற்குள், தமன் 3 செயற்கைச் சுவாசக் கருவிகளைச் சோதனைக்கு அனுப்பியுள்ளது ஜோதி சிஎன்சி நிறுவனம்.
குஜராத் மாநிலம் ராஜ்காட்டில் அமைந்துள்ளது ஜோதி சிஎன்சி நிறுவனம். கோவிட்-19 காலங்களில் செயற்கை சுவாசக் கருவிகளைத் தயாரித்து, தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவந்தது.
மேலும் இவர்கள் தயாரித்த தமன் 1 என்ற கருவி கோவிட்-19 நோயாளிகளுக்கு மட்டும் பிரத்யேகமாக சிகிச்சை அளிக்க உருவாக்கப்பட்டது. குஜராத் மாநிலத்தில் செயற்கைச் சுவாசக் கருவிகளின் குறைபாடு ஏற்பட்டபோது, ஜோதி நிறுவனம் 600க்கும் மேற்பட்ட கருவிகளை கொடுத்து உதவியது.
மதுபோதையில் தாக்குதல் - இளம்பெண் உயிரிழப்பு!
இவ்வேளையில் மகாராஷ்டிரா, புதுச்சேரி முதலமைச்சர்களிடமிருந்து, இந்தக் கருவிக்கான ஆர்டர்கள் ஜோதி நிறுவனத்துக்குக் கிடைத்தது. இச்சூழலில் அகமதாபாத் மருத்துவமனையின் மருத்துவக் குழு ஒன்று, இந்தக் கருவிகள் நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க உகந்தது அல்ல என்று குஜராத் மாநில முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியது.
இதனைக் கொண்டு எதிர்க்கட்சிகள், இந்தக் கருவியின் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைக்கத் தொடங்கின. இவ்விவகாரம் சூடுபிடிக்க, புதுச்சேரி முதலமைச்சர், “நாங்கள் தமன் 1 கருவிக்குக் கொடுத்த ஆர்டரை ரத்துசெய்து ஜோதி நிறுவனத்துக்குக் கடிதம் அனுப்பியுள்ளோம்” என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
சுட்டுக்கொல்லப்பட்ட பாஜக தலைவர்!
விவகாரம் பெரிதாக நமது ஈடிவி செய்தியாளர் ஜோதி நிறுவனத்தின் நிர்வாகி பரக்ரம் சிங்கை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசுகையில், “தமன் 1 கோவிட்-19 நோயாளிகளுக்காக மட்டும் உருவாக்கப்பட்டது. தற்போது தமன் 3 எனும் புதிய கருவியை அனைத்து வசதிகளுடன் உருவாக்கி டெல்லியில் சோதனைக்காக அனுப்பியுள்ளோம்” என்று கூறியுள்ளார்.