கடந்த மாதம் முதலமைச்சர் அசோக் கெலாட்டுடன் ஏற்பட்ட மோதல் காரணாக காங்கிரசிலிருந்து சச்சின் பைலட் விலக்கப்பட்ட நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
முன்னதாக, ராஜஸ்தான் காங்கிரஸ் முதலைமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராகப் போர்க்கொடித் தூக்கிய சச்சின் பைலட் உள்ளிட்ட 19 சட்டப்பேரவை உறுப்பினர்கள் காங்கிரசிலிருந்து நீக்கப்பட்டனர். இதனால் அம்மாநில அரசின் பெரும்பான்மைக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.
இதையடுத்து சச்சின் பைலட், அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானப்படுத்தும் முயற்சியாக காங்கிரஸ் மேலிடத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. அதன் முக்கிய நகர்வாக ராகுல் காந்தி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியுடன் சச்சின் பைலட் முக்கியச் சந்திப்பை மேற்கொண்டார்.
இந்தச் சந்திப்பில், சச்சின் பைலட்டின் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டு, அவை நிறைவேற்றப்படும் இருவரும் உறுதியளித்தாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சச்சின் பைலட் மீண்டும் காங்கிரசில் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கனிமொழி போன்று நானும் அவமானங்களை சந்தித்திருக்கிறேன் - ப. சிதம்பரம் கருத்து