ETV Bharat / bharat

ஊரடங்கில் 380 கி.மீ., பயணத்திற்குப் பிறகு குழந்தைக்கு நடந்த இதய சிகிச்சை!

மும்பை: ஊரடங்கு நேரத்தில் இரண்டரை மாத குழந்தை ஒன்று, மருத்துவர்கள் உதவியோடு 380 கி.மீ., கடந்து சென்று இதய சிகிச்சைப் பெற்று, உடல் நலம் தேறிய சம்பவம் பலரால் வெகுவாகப் பாராட்டப் பெற்றது.

குழந்தை
குழந்தை
author img

By

Published : Jun 10, 2020, 5:54 PM IST

மகாராஷ்டிரா மாநிலம், சங்கிலி மாவட்டத்தில் ஊரடங்கு அறிவிப்பதற்கு ஒரு வாரம் முன்பு, மார்ச் 16ஆம் தேதி இதயப் பிரச்னையோடு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.

பிறந்த ரோஹித் சவான் என்ற அந்த ஆண் குழந்தை, உடனடியாக இதய சிகிச்சை செய்யும் நிர்பந்தத்தில் இருந்தது. ஆகையால், அக்குழந்தையின் பெற்றோர் சங்கிலி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தை ரோஹித்தின் உடல்நிலை மிகவும் மோசமானதால், குழந்தையை மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.

அதைத் தொடர்ந்து தகவல் அறிந்து குழந்தைக்கு உதவும் நோக்கில், சங்கிலி மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலகம் ஆம்புலன்ஸ் போக்குவரத்து வசதியை ஏற்பாடு செய்திருந்தது.

தொடர்ந்து மருத்துவர்களின் உதவியால், ஆக்ஸிஜன் தரும் கருவிகளுடன் குழந்தை ரோஹித்தை ஏற்றிக் கொண்ட ஆம்புலன்ஸ் 380 கிலோ மீட்டர் தூரம், கிட்டத்தட்ட பத்து மணி நேரம், இந்த ஊரடங்கு நேரத்தில் பயணித்து சங்கிலி மாவட்டத்தில் இருந்து, மும்பையில் உள்ள தனியார் மருத்துவனைக்குக் கொண்டு சேர்த்தது. அதையடுத்து ரோஹித்திற்கு, அங்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. தற்போது குழந்தை நலமுடன் உள்ளான்.

மத்திய அரசின் ராஷ்டிரிய பால் ஸ்வஸ்திய கார்யக்ரம் திட்டத்தின் கீழ், சிகிச்சைக்கான முக்கால்வாசி பணம் சிகிச்சை பெற்றவர்களுக்கு அளிக்கப்பட்டது. மேலும் மருத்துவமனையின் அறக்கட்டளையும் மீதியுள்ள பணத்திற்குப் பொறுப்பேற்றுக் கொண்டது.

இதையும் படிங்க: கர்நாடக கோவிட்-19 : நிறம் மாறும் உடுப்பி, சாமராஜநகர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.