1980களில் பீரங்கிகளின் படைப்பிரிவில் சேர்க்கப்பட்ட போஃபோர்ஸ் ரக துப்பாக்கி, பல கோணங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தும் திறன் கொண்டது. லடாக்கில், ராணுவ பொறியியலாளர்கள் அத்தகைய ஒரு போஃபோர்ஸ் துப்பாக்கியை சேவையாற்றுவதைக் காண முடிந்தது. இது ஒரு சில நாட்களில் பயன்படுத்த தயாராக இருக்கும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அலுவலர்களின் கூற்றுப்படி, துப்பாக்கியை பயன்படுத்த அவ்வப்போது சேவை மற்றும் பராமரிப்பு தேவைப்படுகிறது, அதற்காக தொழில்நுட்ப வல்லுநர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பாகிஸ்தானுக்கு எதிரான 1999 கார்கில் போரில் போஃபோர்ஸ் துப்பாக்கிகள் திறனை நிரூபித்தன. உயரமான மலைகளில் கட்டப்பட்ட பதுங்கு குழிகளையும் தளங்களையும் எளிதில் அழித்து பாகிஸ்தான் ராணுவத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.