ETV Bharat / bharat

அமேதி: தாய், மகள் தீக்குளிப்பு, காங்கிரஸ் உறுப்பினர் மீது வழக்கு!

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் தாய், மகள் தீக்குளித்து எரிந்த விவகாரத்தில் மூன்று காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். காங்கிரஸ் உறுப்பினர் உள்பட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Amethi self-immolation: 3 cops suspended; 4 including Cong leader booked for 'criminal conspiracy'

author img

By

Published : Jul 18, 2020, 9:31 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி பகுதியைச் சேர்ந்த ஷஃபியா(55) தனது மகள் குடியாவுடன் (28) வசித்துவந்துள்ளார்.

இந்நிலையில் அவர்களின் நிலத்தை ஒரு கும்பல் ஆக்கிரமித்துள்ளனர். இது குறித்து பலமுறை புகார் அளித்தும் ஆக்கிரமிப்பாளர்கள் மீது அமேதி காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதில் காவல் துறையினர் ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதமாக செயல்பட்டு வந்ததால் மனமுடைந்த தாயும், மகளும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலகம் எதிரிலியே நேற்று (ஜூலை17) தீக்குளித்தனர்.

இதனையடுத்து இரு பெண்களின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்த காவல் துறையினர், அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதில் தாய் குதியா 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறார். மகள் ஷோபியா 20 சதவீத காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

உடலில் பற்றி எரியும் நெருப்புடன் இரு பெண்களும் அலறி ஓடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகிறது. இந்நிலையில், இது குறித்து தெரிவித்துள்ள அமேதி காவல் கண்காணிப்பாளர் கியாதி கார்க், “ அமேதி ஜாமோ காவல் நிலைய தலைவர் உள்பட மூன்று காவல் துறையினர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி இந்த விவகாரம் குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விசாரித்துவருகிறார்” என்றார்.

அமேதி காவல் கண்காணிப்பாளர் கியாதி கார்க் செய்தியாளர்ச் சந்திப்பு

மேலும் இது குறித்து தெரிவித்த லக்னோ காவல் இயக்குனர் சுஜீத் பாண்டே கூறுகையில், இந்தச் சம்பவத்தில் தாயையும், மகளையும் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படும் ஆஸ்மா, சுல்தான், ஏஐஎம்ஐஎம் கட்சி அமேதி மாவட்டத் தலைவர் கதிர் கான், முன்னாள் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அனூப் படேல் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

இதையும் படிங்க...ஒப்பந்தங்களின் அடிப்படையில் சர்வேத விமான போக்குவரத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.