உலகம் கரோனா பெருந்தொற்றை சமாளிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்துவரும் நிலையில், தற்போது வைரஸ் பாதிப்பை தடுக்க அமெரிக்க நுரையீரல் வாரியம் அந்நாட்டு இளைஞர்களுடன் கைகோர்த்துள்ளது.
அந்நாட்டின் வடமேற்கு பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து ஸ்மார்ட் போன் இணையதள தகவல் சேமிப்பை மேற்கொள்ளவுள்ளன.
18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் இந்த இலவச இணைய செயலியை பதிவிறக்கம் செய்து தங்கள் பகுதியில் கரோனா பாதிப்பின் அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்யவேண்டும்.
இந்த ஒருங்கிணைந்த தகவல் சேமிப்பு மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் அனைவருக்கும் நோய் தொற்றை எதிர்கொள்ள உதவும் என நுரையீரல் வாரியம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் கரோனா பாதிப்பு நிவாரண நிதியாக 2.5 கோடி டாலர் நிதியை நுரையீரல் வாரியம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனாவுக்கு எதிராக ஆன்டிபாடி சிகிச்சைக்கு தயாராகும் அமெரிக்கா!