அமேசான் நிறுவனரான ஜெஃப் பெஸாஸ் வரும் வாரம் இந்தியா வரவுள்ளார். அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக டெல்லியில் வரும் 15,16 ஆகிய தேதிகளில் சிறு, நடுத்தர வணிகம் சார்ந்து சம்பவ் (Sambhav) என்னும் ஒரு முக்கிய நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதில் அமேசான் நிறுவனம் இந்தியாவில் எதிர்கொள்ளும் வணிகம் சார்ந்த ஒழுங்குமுறை சிக்கல் குறித்தும், இந்தியாவில் வளர்ந்துவரும் தொழில்நுட்பம் எப்படி அமேசானை மேம்படுத்த கைக்கொடுக்கும் என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. அதனால் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு தொழிலதிபர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இதையும் படியுங்க: மும்பை போலீசிடம் சிக்கிய தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி!