ETV Bharat / bharat

நடுரோட்டில் போலீசாரை தாக்கி ரகளை செய்த இளைஞர் - புதுச்சேரியில் பரபரப்பு! - காவலர்கள் தாக்கப்பட்ட சம்பவம்

புதுச்சேரி: போதையில் ரகளை செய்த இளைஞரை பிடிக்கச் சென்ற காவலர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் தாக்கப்பட்ட சம்பவம்
போலீசார் தாக்கப்பட்ட சம்பவம்
author img

By

Published : Jan 12, 2020, 8:51 AM IST

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் அருகே போதையில் இருந்த 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் அவ்வழியே சென்றவர்களை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரகளையில் ஈடுபட்ட அந்த இளைஞர், அந்த வழியே சென்ற வாகனங்களையும் அடித்து உடைத்துள்ளார். பின்னர் இது குறித்து தகவலறிந்த பெரியகடை காவல் துறையினர் அங்கு சென்று ரகளையில் ஈடுபட்ட இளைஞரை பிடிக்க முயன்றனர்.

அப்போது தகாத வார்த்தைகளால் திட்டி காவல் துறையினரை அந்த இளைஞர் தாக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த இளைஞரை மடக்கிப் பிடித்த காவல் துறையினர் அவரது கை கால்களை பிடித்தபடி குண்டுகட்டாக தூக்கிச் சென்றனர். இக்காட்சி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீசார் தாக்கப்பட்ட சம்பவம்

அந்த இளைஞர் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தியிருக்க வேண்டும் என சந்தேகித்த காவல் துறையினர் அவரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதையும் படிங்க: 'அரசியல்வாதிகள் என்னைப் போல் இருக்க வேண்டும் '- கமல்ஹாசன்

Intro:புதுச்சேரி நகரில் போதையால் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை பிடிக்க சென்ற போலீசாரையும் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது..Body:புதுச்சேரி நகரில் போதையால் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை பிடிக்க சென்ற போலீசாரையும் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது..

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் அருகே போதையில் இருந்த 22 வயது மிக்க வாலிபர் ஒருவர் அவ்வழியே சென்று வருபவரை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் அவர்களது வாகனங்களையும் அடித்து உடைத்தார். 1 மணி நேரமாக இவர் ரகளையில் ஈடுபட்டது குறித்து தகவல் அறிந்த பெரியகடை போலீசார் அங்கு வந்து அவரை பிடிக்க முயன்றனர்.அப்போது போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி வாலிபர் போலீசாரையும் தாக்கினார். .இதனால் அவரை போலீசார் கை கால்களை பிடித்தபடி சென்ற காட்சி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த வாலிபர் கஞ்சா போன்ற போதை பொருட்களை பயன்படுத்தி இருக்க வேண்டும் என போலீசார் சந்தேகித்ததால் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்..Conclusion:புதுச்சேரி நகரில் போதையால் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை பிடிக்க சென்ற போலீசாரையும் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது..
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.