உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை விமர்சித்து அவதூறு கட்டுரை வெளியிட்டதாகக் கூறி 'தி வயர்' செய்தி நிறுவனத்தின் நிறுவன ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் மீது அயோத்தி காவல் நிலையத்தில் அம்மாநில அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதையடுத்து அவர் மீது இரண்டு முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்த அம்மாநில காவல் துறை, இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகிறது. மனுதாரர் சார்பில் குற்றம்சாட்டப்பட்ட நபரைக் கைதுசெய்ய வலியுறுத்தப்பட்ட நிலையில், குற்றம் உறுதிசெய்யும் பட்சத்தில் மூன்றாண்டு சிறை தண்டனைக்கான வாய்ப்புகள் உள்ளன.
இதையடுத்து ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் சார்பில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டு அதன் விசாரணை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அங்கு அவருக்கு முன்ஜாமின் வழங்கப்பட்டது. மேலும், அவர் தனது கடவுச்சீட்டை ஒப்படைக்கவும் உத்தரவிட்டு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
இதையும் படிங்க: 4 மண்டலங்களை தவிர்த்து கரோனா வேறெங்கும் இல்லை - கேசிஆர்