ETV Bharat / bharat

பாஜக ஆதரவு நிலைப்பாடு எடுக்கப்போவது உத்தவா? பவாரா? - வீழ்கிறதா 'மகா விகாஸ் அகாதி' கூட்டணி?

author img

By

Published : Jul 8, 2020, 4:05 PM IST

”இரு கட்சிகளும் தங்களுக்கிடையேயான கூட்டணி தர்மத்தை மீறியுள்ளன. இதுகுறித்தும் உத்தவ் தாக்கரே - சரத் பவார் திடீர் சந்திப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆட்சியமைத்த முதல் நாளிலிருந்து கூட்டணிக் கட்சிகளுக்கிடையேயான தகவல் பரிமாற்றத்தில் பாரிய இடைவெளி இருந்துவருவது நன்கு புலப்படுகிறது” என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் ராஜேந்திர நாரஹர் சத்தே. அவரின் முழுக் கட்டுரை இதோ...

All is not well in Maharashtra
All is not well in Maharashtra

மகாராஷ்டிராவில் பெரும் அரசியல் குழப்பத்துக்குப் பின் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (என்சிபி), காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. அதன்படி, சிவ சேனாவின் உத்தவ் தாக்கரே முதலமைச்சராகப் பதவியேற்க, என்சிபியின் அஜித் பவார் துணை முதலமைச்சரானார். காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு அமைச்சரவையில் முக்கிய இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டன.

இந்தக் கூட்டணி ஆட்சியை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று, முந்தையை அரசான பாஜக கங்கணம் கட்டிக்கொண்டது. வெளிப்படையாகவும் பல முயற்சிகளை அக்கட்சி கையாண்டது. ஆனால், தற்போது பாஜகவைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் வெளியிட்டுள்ள அறிக்கை, பாஜகவின் முந்தைய செயல்பாடுகளுக்கு முற்றிலும் வேறு மாதிரியாக உள்ளது.

மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சியை பாஜக வீழ்த்த நினைத்தது உண்மைதான்; ஆனால், அதற்கான வேலையை நாங்கள் பார்க்கத் தேவையில்லை, அம்மூன்று கட்சிகளுமே அதனைச் செய்துவிடும் என்று பட்டவர்த்தனமாக அறிக்கையில் கூறியுள்ளார். இந்த அறிக்கையின் மூலம் கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளது புலப்படுகிறது.

ஃபட்னாவிஸின் கூற்றுக்கு நியாயம் சேர்க்கும் வகையில், இத்தகைய நெருக்கடியான கரோனா சூழலில் தலைவர்கள் யாரும் சந்திப்பு மேற்கொள்ளாத நிலையில், புற்றுநோயிலிருந்து மீண்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை அவரது இல்லத்துக்கே சென்று சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பு ஊடக கவனம் பெற்று மாநிலம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. காலையில் ஃபட்னாவிஸின் அறிக்கை, மாலையில் இவர்கள் சந்திப்பு என்பதால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இச்சந்திப்பில் என்ன நடந்தது, என்ன பேசப்பட்டது என எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்றாலும், 12 காவல் துணை ஆணையர்களை இடமாற்றம் செய்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த வாரம் காவல் துறையைக் கண்காணிக்கும் என்சிபியைச் சேர்ந்த உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கின் ஆலோசனைப்படி, மும்பை ஆணையர் 12 துணை ஆணையர்களை இடமாற்றம் செய்து உத்தரவிட்டிருந்தார். ஆனால், இதுதொடர்பாக உத்தவ் தாக்கரேவிடம் கலந்தாலோசிக்காமல் இம்முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறி, சிவசேனா சார்பில் விமர்சிக்கப்பட்டது.

எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து இந்த உத்தரவு 24 மணி நேரத்தில் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது. இது முதலமைச்சரின் உத்தரவின்படி நடந்ததாகவும் கூறப்பட்டது. மேலும், அனில் தேஷ்முக்கை அழைத்து இதுபோன்ற முடிவுகளைத் தன்னிச்சையாக எடுக்க வேண்டாம் என்றும் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பவார் - உத்தவ் சந்திப்பில் இந்தப் பிரச்னை மட்டும்தான் விவாதிக்கப்பட்டதா என்றால், இல்லை. வேறு சில முக்கியப் பிரச்னைகளும் பேசப்பட்டுள்ளன. கடந்த நான்கு நாள்களுக்கு முன் நான்கு சிவசேனா கவுன்சிலர்கள், துணை முதலமைச்சர் அஜித் பவார் முன்னிலையில் என்சிபியில் இணைந்தனர். என்சிபிக்கு சிவசேனாவும் இதே பாணியில் பதிலளித்துள்ளது. ஆம், உள்ளாட்சி அமைப்புத் தேர்தலில், என்சிபியை விடுத்து பாஜகவை சிவசேனா ஆதரித்துள்ளது. இதனால் தங்களுக்கிடையேயான கூட்டணி தர்மத்தை இரு கட்சிகளும் மீறியுள்ளதால், அதுகுறித்தும் சந்திப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆட்சியமைத்த முதல் நாளிலிருந்து கூட்டணிக் கட்சிகளுக்கிடையேயான தகவல் பரிமாற்றத்தில் பாரிய இடைவெளி இருந்துவருவது நன்கு புலப்படுகிறது.

என்சிபி - சிவசேனா விவகாரம் ஒருபுறம் என்றால், காங்கிரஸ் அமைச்சர்களுடன் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சந்திப்பு மேற்கொள்வதில்லை என அக்கட்சி சார்பில் புகார் தெரிவிக்கப்படுகிறது. இதனை காங்கிரஸ் அமைச்சர்கள் பலர் ஊடக பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளனர். அதற்கு உதாரணமாக, ஜூன் மாதத்தின் கடைசி வாரத்தில் காங்கிரசின் முக்கிய அமைச்சர்கள், ஊடகங்களின் வாயிலாக முதலமைச்சர் சந்திப்புக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்பிறகே முதலமைச்சர் அவர்களைச் சந்தித்தார்.

உத்தவ் இதுவரை ஒரு அரசியல் பதவிக்கோ, தேர்தலுக்கோ கடுமையாகப் போராடியதில்லை. மேலும், அவர் நேரடி அரசியலுக்கு முற்றிலும் புதியவர். அதனால், அவர் தனக்கு இருக்கும் அதிகாரத்தை மட்டுமே நம்பி செயல்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இந்தக் காரணங்களே அவருக்கும், அவரின் அமைச்சரவை சகாக்களுக்கும் இடையேயான மோதல் போக்குக்கு வழிகோலுகிறது.

காலத்தின் தற்செயலாக, உத்தவின் அமைச்சரவையில், அரசியலில் நன்கு ஊறிப்போன முன்னாள் முதலமைச்சர் ஒருவர், துணை முதலமைச்சர்கள் மூவர் இருப்பதே கூட்டணி பூசலுக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது. ஜூன் மாதம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், குடிமைப் பொருள் விநியோக அமைச்சரான புஜ்பால், தன்னைக் கேட்காமல் துணைச் செயலர் சில அறிவிப்புகளை முன்மொழிந்ததாக முறையிட்டார். அதன்பின், அந்த அறிவிப்புகள் அரசால் கைவிடப்பட்டன. இதுபோன்ற பல நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. அவற்றை ஊடகங்களிடம் வெளிப்படையாக அமைச்சர்கள் கூறியுள்ளனர்.

கூட்டணிக் கட்சிகளுக்கிடையேயான கருத்து வேறுபாடு கட்சிகளின் நலனை மட்டுமல்லாமல், அரசு நிர்வாகத்தையும் வெகுவாகப் பாதித்துள்ளது. கரோனா தொற்றால் ஏற்பட்ட சுகாதார பேரிடரில், அரசு நிர்வாகம் சரியாகச் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. உத்தரவுகளைப் பிறப்பிப்பதும், அவற்றைத் திரும்பப் பெறுவதுமாக தொடர் நிகழ்வுகள் மாநிலத்தில் நடந்துகொண்டிருக்கின்றன. இந்த விவகாரத்தில் ஓய்வுபெற்ற தலைமைச் செயலர் அஜோய் மேத்தாவின் செயலை என்சிபியும், காங்கிரசும் விமர்சித்தன.

ஓய்வுபெற்ற தலைமைச் செயலர் அஜோய் மேத்தாவின் பதவிக்காலம் மூன்று முறை நீட்டிக்கப்பட்டது. இதனை என்சிபி, காங்கிரஸ் கட்சிகள் எதிர்த்ததையடுத்து புதிய தலைமைச் செயலரை உத்தவ் நியமித்தார். ஆனால், கூட்டணிக் கட்சிகளின் விருப்பத்திற்கு மாறாக, மேத்தாவை சிறப்பு ஆலோசகராக உத்தவ் நியமித்துக் கொண்டார்.

இந்நிகழ்வுகள் அனைத்தும் கூற முனைவது ஒன்றை மட்டும்தான். என்சிபி பாஜக ஆதரவு நிலைப்பாடு எடுக்கும் அல்லது சிவசேனா மீண்டும் பாஜகவுடன் கைகோர்க்கும். இதற்கு மறுப்பு தெரிவித்துப் பேசியுள்ள சிவசேனாவின் சஞ்சய் ராவத், ”நிறைய பேர் மகா விகாஸ் அகாதி கூட்டணி வீழும் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவ்வாறு ஒருபோதும் நிகழாது” என்று சத்தியம் செய்யாத குறையாக உறுதியளித்துள்ளார். இதனையே சரத் பவாரும் வழிமொழிந்துள்ளார்.

எது எப்படியாகினும் மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது வெளிப்படையாகத் தெரிகிறது. கூட்டணிக் கட்சித் தலைவர்களின் வரிசையான உறுதிமொழிகளும் அதற்கு நியாயம் செய்கின்றன. மகாராஷ்டிர அரசியலில் அனைத்தும் சரியாக நடக்கவில்லை. சர்வநிச்சயமாக!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.