ETV Bharat / bharat

கரோனாவால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் மது அருந்துபவர்கள்

வேலைவாய்ப்பு, வணிகம், நிதி நெருக்கடி போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண மக்கள் பல்வேறு வழிகளை மேற்கொண்டுவருகின்றனர். அழுத்தம், கவலையிலிருந்து தப்பிக்கும் நோக்கில் மக்கள் மதுவை நாடி செல்கின்றனர்.

author img

By

Published : May 22, 2020, 2:43 PM IST

கரோனா
கரோனா

மது அருந்தினால் கரோனா நோய் தாக்கும் அபாயம் அதிகரிக்கும். இதனால், நுரையீரலில் ஏற்படும் பிரச்னைகள் அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கரோனா வைரஸ் நோய் ஏற்படுத்திய தாக்கத்தால் உலக நாடுகள் செய்வதறியாமல் தவித்துவருகின்றன. கவலை உணர்வு, நம்பிக்கையின்மை ஆகியவை தற்போது வெகு சாதாரணமாக மாறிவிட்டது. வேலைவாய்ப்பு, வணிகம், நிதி நெருக்கடி போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண மக்கள் பல்வேறு வழிகளை மேற்கொண்டுவருகின்றனர். அழுத்தம், கவலையிலிருந்து தப்பிக்கும் நோக்கில் மக்கள் மதுவை நாடி செல்கின்றனர். மது அருந்துபவர்கள் கரோனா வைரஸ் நோய் ஏற்படுத்திய அழுத்தத்திலிருந்து தப்பிக்க மேலும் மதுவை நாடிச் செல்வதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. குறைந்த அளவு மது குடித்தாலும் தற்போதுள்ள சூழலில் இதய நோய் பிரச்னை அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும்

மது அருந்துவதால் நோயின் தாக்கம் அதிகரிக்கும் என இத்தாலியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சுவாச அமைப்பில் வைரஸ் நோய் பாதிப்பு மது அருந்துவதால் அதிகரிக்கும். மதுவுக்கு அடிமையானவர்களுக்கு மோசமான நுரையீரல் பிரச்னை ஏற்படும். வென்டிலேட்டர்கள் மூலம் சுவாசித்தாக வேண்டிய கட்டாயச் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது என இத்தாலியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜியானி டெஸ்டினோ தெரிவித்துள்ளார். அதிகம் மது அருந்துவதால் ACE - 2 என்ற புரதத்தின் விகிதம் உடலில் அதிகரிக்கும். இதுகுறித்த ஆராய்ச்சி விவர்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ACE - 2 புரதத்தால் மனித செல்களில் வைரஸ் எளிதாக நுழையும்.

மது அருந்துவதால் மூளையில் ஏற்படும் பிரச்னைகள்

Aminobutyric என்ற அமிலத்தின் உற்பத்தி மது அருந்துவதால் அதிகரிக்கும். இதன்மூலம், மூளையில் நரம்பியல் பரிமாற்றம் பாதிக்கப்பட்டு அதன் செயல்பாடுகளின் வேகம் குறையும். glutamate என்ற ரசாயனத்தின் மூலம் நரம்பியல் செயல்பாடுகள் இயல்பாக உள்ளது. ஆனால், மது பழக்கத்தின் மூலம் இது பாதிப்புக்குள்ளாகும். உடல், மூளை ஆகியவற்றின் வேகம் மது அருந்துவதால் குறையும். இல்லாத ஒன்று இருப்பது போன்ற உணர்வு, உடல் ஒத்துழைக்காமல் இருப்பது ஆகியவை மது பழக்கத்தினால் மனிதர்களுக்கு ஏற்படும். இந்த பழக்கம் அழுத்தத்தை குறைக்காமல், அதனை மேலும் அதிகரிக்கிறது. இந்த பழக்கம் தொடர்ந்தால், மூளையின் மையப் பகுதி பாதிப்புக்குள்ளாகும். மது பழக்கத்தின் மூலம் Dopamine என்ற ஹார்மோன்கள் உடலில் அதிகம் சுரக்கும். இந்த ஹார்மோன்கள் மூலம் மது அருந்த வேண்டும் என்ற எண்ணம் மனிதர்களிடையே அதிகம் தோன்றும். இதுகுறித்து சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் மன நலத்துறை பேராசிரியர் மைக்கேல் பார்ரேல் கூறுகையில், "மன அழுத்தத்தை குறைப்பதற்காகவே மக்கள் மது பழக்கத்தை மேற்கொள்கின்றனர். ஆனால், மது அருந்துவதன் மூலம் மன அழுத்தம் அதிகரிக்கும்" என்றார்.

கோவிட் - 19
கோவிட் - 19

ஊரடங்கின்போது வெளிநாடுகளில் அதிகரித்த மது விற்பனை

ஊரடங்கு காலகட்டத்தில், அமெரிக்கா, பிரட்டன் போன்ற நாடுகளில் மதுவின் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, அமெரிக்காவில் 55 விழுக்காடும் பிரிட்டனில் 22 விழுக்காடும் அதிகரித்துள்ளது. தென் ஆப்ரிக்கா, இந்தியா, இலங்கை, கிரீன்லாந்து போன்ற நாடுகளில் ஊரடங்கு காரணமாக மதுக் கடைகள் மூடப்பட்டிருந்த போதிலும், மது அருந்துபவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. ஊரடங்கில் தற்போது தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் மதுப் பிரியர்கள் இன்னும் சுதந்திரமாக மதுவை அருந்தலாம்.

ஒரு சிறிய மன நிம்மதி

கரோனா
கரோனா

துயரை நீக்கி இன்பம் தரும் அந்த மன நிலை சிறிய காலமே இருக்கும். ரத்தத்தில் மதுவின் கலப்பு அதிகரிப்பதன் மூலம், ஆறுதல், உற்சாகம், இல்லாத ஒன்று இருப்பது போன்ற உணர்வு ஒரு சில நொடிகளே மூளையில் நீடிக்கும். 20 முதல் 30 நிமிடங்களுக்கு பிறகு, உடலிலிருந்து மது வெளியாகிவிடும். அதன் பின்னர், அசௌகரியமான உணர்வு தோன்ற தொடங்கும். மது அருந்துவதற்கு முன்பு மன அழுத்தம் அதிகமாக இருப்பினும், போதை தணிந்த பிறகு கோபம், மன அழுத்தம் அதன் உச்சத்தை அடையும்.

கரோனா
கரோனா

மதுவுக்கு ஏன் அடிமையாகிறார்கள்?

  • கரோனா ஏற்படுத்திய அழுத்தத்தை குறைக்க மது அருந்துகிறார்கள்.
  • வீட்டிலிருக்கும் போது சலிப்புணர்வை குறைக்க மது அருந்துகிறார்கள்.
  • வேலையை இழந்து வாடும் போது மது அருந்துகிறார்கள்.
  • மற்றும் பல தனிப்பட்ட காரணங்களுக்காக மது அருந்துகிறார்கள்.

உண்மையும் கட்டுக் கதையும்: மது அருந்துவதால் வைரஸ் அழியும்

உண்மை: வெளிப்புற உடலில் மட்டுமே மது, கிருமி நாசினியாக செயல்படும். மூக்கு, வாய் மூலம் உடலுக்குள் செல்லும் வைரஸ் மது அருந்துவதன் மூலம் அழியாது. இந்த பழக்கத்தை மேற்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, நோய் பாதிக்கும் அபாயம் அதிகரிக்கும். அதிகமாக மது அருந்துபவர்களுக்கு நோய் பாதிக்கும் அபாயம் மேலும் அதிகரிக்கும்.

மதுவை அருந்தி அழுத்தத்தை குறைத்துக் கொள்ளலாம் என எண்ணுபவர்கள் அதிலிருந்து மீள முயற்சி மேற்கொள்ள வேண்டும். நல்ல உணவு, உடற்பயிற்சி, யோகா போன்ற சுகாதார பழக்க வழக்கங்களை மேற்கொண்டு அழுத்தத்தை குறைக்க கவனம் செலுத்த வேண்டும்.

இதையும் படிங்க: கரோனாவால் வீட்டில் தனிமை... இதான் வாய்ப்புனு காதலனுடன் யெஸ்ஸான திருமணமான பெண்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.