இதுகுறித்து சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் உரிமையாளர்கள் காவல் துறை, கலால் துறை ஒத்துழைப்புடன் கள்ளத்தனமாக மதுபானங்களை விற்று லாபம் பார்த்து வருகின்றனர்.
இதையடுத்து டிஜிபி, சம்பந்தப்பட்ட காவலர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய உத்தரவிட்டார். தவறு நடந்த மதுபான கடைகளின் உரிமங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள மதுக்கடைகளின் சரக்கு இருப்பு விவரங்களை சரி பார்த்து வருகிறோம்.
இதனை தலைமைச் செயலரும் காவல் துறை செயலரும் கலால் துறை செயலரும் நேரடியாக கண்காணிக்கின்றனர். இது தொடர்பாக வருவாய் துறை செயலரிடமிருந்து அறிக்கையை எதிர்பார்த்துக்கொண்டு உள்ளோம். அந்த அறிக்கை வந்தவுடன் அதில் சம்பந்தபட்ட குற்றவாளிகள் கைது செய்யப்படுவர்" என பதிவிட்டிருந்தார்.
இதையும் படிங்க: கரோனா தொற்றால் சிகிச்சையில் இருக்கும் ஈடிவி பாரத் செய்தியாளரிடம் ஸ்டாலின், உதயநிதி நலம் விசாரிப்பு!