தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினரான தலசானி ஸ்ரீநிவாஸ் அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி குறித்து சர்ச்சையாக கருத்து தெரிவித்தார். ஹைதராபாத்தில் மட்டும்தான் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி இயங்கிவருகிறது என அவர் தெரிவித்திருந்தார். இதற்கு அசாதுதீன் ஓவைசியின் சகோதரர் அக்பருதீன் ஓவைசி பதிலடி தந்துள்ளார்.
இதுகுறித்து அவர், உங்கள் நாவை அடக்க வேண்டும். இல்லை எனில் நான் பேச தொடங்குவேன். சந்திரசேகர ராவ், ராமா ராவ் ஆகியோர் தங்கள் தொண்டர்களுக்கு எப்படி பேச வேண்டும் என்பதை கற்றுத்தரவேண்டும். தங்களுக்கு ஏற்றார் போல் கட்சி மாறுபவர்கள் அவர்கள். நான் நினைத்தால் இந்தியாவின் எந்த தொகுதியில் நின்றும் வெற்றிபெறுவேன்" என்றார்.
இதையும் படிங்க: 'சலோ சட்டசபை' தெலுங்கு தேசம், கம்யூனிஸ்ட் கைகோர்ப்பு!