ஆந்திராவிலிருந்து பிரிந்த தெலங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத்தை எடுத்துக்கொண்டது. இதனால் ஆந்திராவுக்கு தலைநகர் இல்லாத சூழல் நிலவியது. இந்நிலையில் அமராவதியை தலைநகராக்கும் பணியை அப்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முன்னெடுத்தார்.
அதன் பின்னர் நடந்த தேர்தலில் சந்திரபாபு நாயுடு தோல்வி அடைய, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்கு வந்தார். தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவின் திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அமராவதி தலைநகர் திட்டமும் கைவிடப்பட்டது. ஜெகன் மோகனின் இத்திட்டத்தை சந்திரபாபு நாயுடு கடுமையாக எதிர்த்துவருகிறார். இதையடுத்து அமராவதியை மீண்டும் தலைநகர் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
இந்ந நிலையில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, சலோ சட்டசபை போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். இந்தப் போராட்டத்தில் அவருடன் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் கைகோர்த்தன. இதனால் இன்று அமராவதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதற்கிடையில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவுக்கு மூன்று தலைநகர்கள் கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்தார். இதுகுறித்து விவாதம் நாளை நடைபெறவுள்ளது. ஜெகன் மோகன் அரசுக்கு தீர்மானத்தை நிறைவேற்றும் அளவிற்கு பெரும்பான்மை இல்லை. ஆகவே இந்த விவகாரம் சிக்கலை சந்திக்கும் என தெரிகிறது.
இதையும் படிங்க: மூன்று தலைநகரங்களைக் கோரும் தீர்மானம் - கூடும் ஆந்திர சட்டப்பேரவை!