ETV Bharat / bharat

ஏர்டெல்-வோடபோனின் முன்னுரிமை திட்டம் மற்ற நுகர்வோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்: ட்ராய் - டிராய் தலைவர் ஆர்.எஸ். சர்மா

ஈடிவி பாரத்தின் டெல்லி செய்தியாளர் கவுதம் டெப்ராய்க்கு ட்ராய் தலைவர் ஆர்.எஸ். சர்மா அளித்த பிரத்யேக நேர்காணலின் போது, 2022க்குள் தொலைதொடர்பு சாதனங்களின் இறக்குமதி பூஜ்ஜியம் என்ற நிலையை அடைவதை ட்ராய் நோக்கமாகக் கொண்டுள்ளது எனத் தெரிவித்தார்.

டிராய்
டிராய்
author img

By

Published : Jul 23, 2020, 9:03 PM IST

தேர்ந்தெடுக்கப்பட்ட சில வாடிக்கையாளர்களுக்கு விரைவான இணைய வேகத்தை உறுதியளிக்கும் ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவின் சிறப்புத் திட்டங்கள் அடிப்படை டிரான்ஸ்ஸீவர் நிலையத்தின் (BTS) அலைவரிசை நிலையாக வைக்கப்பட்டுள்ளதால், மற்ற வாடிக்கையாளர்களின் சேவைகளை பாதிக்கும் என்று ட்ராய் தலைவர் ஆர்.எஸ். சர்மா ஈடிவி பாரத் உடனான பிரத்யேக பேட்டியில் கூறுகிறார்.

ஈடிவி பாரத்-தின் கவுதம் டெப்ரோயிடம் பேசிய ஆர்.எஸ். ஷர்மா, இறக்குமதி செய்யப்படும் தொலைத் தொடர்பு சாதனங்களை இந்தியா நம்பியிருப்பது குறித்தும், சில நாடுகள் ஆரம்பத்தில் தங்கள் மின்னணு பொருள்கள் மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்களை அதிகமாக நாட்டில் சேர்த்து உள்நாட்டு உற்பத்தியை அழித்து பின்னர் விலைகளை உயர்த்தியது குறித்தும் பேசினார்.

நேர்காணலின் சில பகுதிகள்:

கே: சில முன்னுரிமை பயனர்களுக்கு விரைவான வேகத்தை வழங்கும் பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவின் திட்டம் மற்ற சந்தாதாரர்களுக்கான சேவைகளை மோசமாக்கக்கூடும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

முதலில், அடிப்படை டிரான்ஸ்ஸீவர் நிலையம்( பி.டி.எஸ்)-க்கு அலைவரிசை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், ஒரு சில வாடிக்கையாளர்களுக்கு தரப்படும் எந்தவொரு முன்னுரிமையும் பிற சாதாரண வாடிக்கையாளர்களின் சேவைகளை பாதிக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட சில வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டங்கள் சாதாரண வாடிக்கையாளர்களை மோசமாக பாதிக்கலாம் என்று தெரிகிறது.

மேலும், இதுபோன்ற திட்டங்களை வாடிக்கையாளர்கள் தகவல் முடிவை எடுக்க வசதியாக ‘அதி வேகம்’ என்று அழைக்கப்படுவது என்ன என்று தெளிவாகக் குறிப்பிடவில்லை.

இந்த விவகாரம் டிராயால் விரிவாக ஆராயப்பட்டு வருகிறது, மேலும் எங்கள் பரிசோதனையின் அடிப்படையில் தான் முடிவுக்கு வர முடியும்.

கே: தொலைத் தொடர்பு ஒரு முக்கியமான துறையாக இருப்பதால், தொலைதொடர்பு சாதனங்களின் உள்நாட்டு உற்பத்தியையும் டிஜிட்டல் இறையாண்மையையும் ஊக்குவிக்க வேண்டியது அவசியம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

சில நாடுகள் ஆரம்பத்தில் மின்னணு பொருள்களைக் அதிகமாக சேர்த்து வைத்து நமது உள்நாட்டுத் தொழிலை அழித்து , பின்னர் அவற்றின் விலைகளை உயர்த்தும் உத்திகளை நோக்கமாகக் கொண்டிருந்தன. இந்த தந்திரங்களை நாம் உணர்ந்து முன்னுரிமை சந்தை அணுகல் கொள்கையை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

நாம் நமது சொந்த உள்நாட்டு உற்பத்திக்கு அதிக வாய்ப்புகளை வழங்காவிட்டால், உள்ளூர் உற்பத்தியில் இந்தியா வெற்றி பெறாது என்று நான் நம்புகிறேன்.

3 ஆகஸ்ட் 2018 அன்று உள்ளூர் தொலைதொடர்பு கருவி உற்பத்தியை ஊக்குவித்தல் குறித்த தனது பரிந்துரையை டிராய் வெளியிட்டுள்ளது. 2022ஆம் ஆண்டுக்குள் தொலைதொடர்பு சாதனங்களின் இறக்குமதி பூஜ்ஜியம் என்ற நிலையை இந்தியா அடைய வேண்டும் என்று ட்ராய் பரிந்துரைத்தது.

இந்த நோக்கத்திற்காக, தொலைத்தொடர்பு கருவி உற்பத்தி கவுன்சில் (TEMC), முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய குறிப்பிட்ட பகுதிகளை அடையாளம் கண்டு பரிந்துரைக்க வேண்டும்.

நாட்டில் ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, தரப்படுத்தல், வடிவமைப்பு, சோதனை, சான்றளிப்பு மற்றும் உள்நாட்டு தொலைத் தொடர்பு சாதனங்களை உற்பத்தி செய்வது போன்றவற்றிற்கு ரூ.1,000 கோடி சிறப்பு நிதி உருவாக்கப்பட வேண்டும்.

அரசாங்கக் கொள்கைகள் அதிகமான ஈவுத்தொகையை தந்துள்ளன என்று நான் நம்புகிறேன், ஆனால் இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும்.

கே: சீனாவில் தயாரிக்கப்பட்ட கருவிகளை தனது தரமேம்படுத்துதலுக்கு பயன்படுத்த போவதில்லை என்ற BSNL-ன் அணுகுமுறையைப் பின்பற்றி, சீன தொலைத் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வது சாத்தியம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

நமக்கு தேவையான அனைத்து தொலைத் தொடர்பு சாதனங்களையும் நம் நாட்டில் தயாரிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

இந்தியாவில் உபகரணங்கள் தயாரிக்க அரசு அனைத்து வகையான சலுகைகளையும் அளித்து வருகிறது, மேலும் இந்திய நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தொழில்நுட்பத்தை உருவாக்கி நாட்டிற்குள் உபகரணங்கள் தயாரிக்க வேண்டும்.

சீன உபகரணங்களை பயன்படுத்துவதை தடை செய்வதை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த முக்கியமான அம்சத்தில் சுய சார்பு பற்றி அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

கே: ஒளிபரப்புத் துறைக்கான புதிய கட்டண விகிதத்திற்கு எந்த மாதிரியான எதிர்வினை கிடைத்தது?

புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பானது வெளிப்படைத்தன்மை, பாகுபாடு காட்டாமை, நுகர்வோர் நலனைப் பாதுகாத்தல் மற்றும் துறையின் ஒழுங்கான வளர்ச்சியை அதன் முக்கிய கொள்கைகளாக செயல்படுத்துதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

புதிய கட்டமைப்பானது நுகர்வோர் சார்பாக உள்ளது, இது அவர்களின் விருப்பப்படி டிவி சேனல்களை வெளிப்படையாகத் தேர்வு செய்து பார்க்க உதவுகிறது.

தேர்வு செய்யும் சுதந்திரம் என்பது தொலைக்காட்சி சேவைகளுக்கான மாதாந்திர கட்டணத்தில் நுகர்வோரின் நேரடி கட்டுப்பாட்டைக் குறிக்கிறது.

சேவை வழங்கல் மதிப்பு தொடர்பில் பல அங்கத்தினர் செயல்படும் ஒரு துறையின் ஒழுங்குமுறைக்கு, மாறுபட்ட நலன்களின் திறனுள்ள சமநிலை தேவைப்படுகிறது.

புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பானது சேனல்களை தனித்தனியாகவோ அல்லது அடிப்படை சேனல்கள் என்றோ வழங்க போதுமான நெகிழ்வுத் தன்மையை வழங்குகிறது. உண்மையில், புதிய கட்டமைப்பானது 2004 முதல் நடைமுறையில் இருந்த சேனல் விலையின் அனைத்து உச்சவரம்பையும் நீக்கியுள்ளது.

புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பானது டிவி சேனல் விலை நிர்ணயம் மற்றும் இந்தத் துறையில் இணக்கமான வணிக செயல்முறைகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வந்துள்ளது என்பதை பகுப்பாய்வு வெளிப்படுத்துகிறது.

வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதற்காக, புதிய கட்டமைப்பில் சேனல்களின் விலைகள் மற்றும் நெட்வொர்க்கின் விலை ஆகியவை தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஒளிபரப்பாளர்கள் தங்கள் சேனல்களின் அதிகபட்ச விலையை தீர்மானிக்க நெகிழ்வுத்தன்மையைக் கொண்டுள்ளனர். நெட்வொர்க் செலவை மீட்டெடுக்க நெட்வொர்க் திறன் கட்டணம். பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திருத்தங்கள் சிறந்த நுகர்வோர் சலுகைகள், அதிக நெகிழ்வான கட்டண திட்டங்கள் மற்றும் நுகர்வோருக்கு அதிக தேர்வுகள் ஆகியவற்றைக் கொடுக்கும். ஒட்டுமொத்தமாக, இந்த திருத்தங்கள் ஒளிபரப்பு மற்றும் கேபிள் சேவைகள் துறையின் ஆரோக்கியமான மற்றும் கட்டமைக்கப்பட்ட வளர்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கே: கோவிட் -19 தொற்றுநோயைக் கையாள்வதில் தொலைத் தொடர்புத் துறையின் முக்கிய பங்கு குறித்து கூற முடியுமா?

நாம் தகுந்த இடைவெளி மற்றும் சுய தனிமைப்படுத்தலைப் மேற்கொள்ளும் போது, ​​இயல்பான தன்மையைப் பேணுவதற்கான ஒரே வழி தொலைதூரத்திலும் இணைந்திருப்பதாகும்.

நாடு தழுவிய ஊரடங்கின் விளைவாக, வீட்டிலேயே தங்கியிருப்பது மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்வது போன்ற தேவைகளுக்காக பல வீடுகள் தொலை அலுவலகங்களாகவும், மெய்நிகர் மாநாட்டு அறைகளாகவும், குழந்தைகளுக்கான ஆன்லைன் பள்ளிகளாக மற்றும் சில சந்தர்ப்பங்களில் குடும்பத்தின் பொழுதுபோக்குக்காக வீடியோ ஸ்ட்ரீமிங் மையமாக மாறியது.

சுத்தமான நீர் மற்றும் மின்சாரத்தைப் போலவே, பிராட்பேண்ட் அணுகலும் நவீன கால தேவையாகிவிட்டது. பிராட்பேண்ட் இணைப்பு இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்வது கடினம்.

மொத்தத்தில், புதிய நிலையானது தொலைத் தொடர்பு இணைப்பு மற்றும் டிஜிட்டல் கருவிகளுடன் சார்ந்த வாழ்க்கையாக இருக்கும்.

கே: தேசிய டிஜிட்டல் தகவல்தொடர்பு கொள்கை (NDCP) 2018-ஐ அரசாங்கம் செயல்படுத்த வேண்டிய சரியான நேரம் இது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

NDCP கொள்கையின் மூன்று முக்கியமான பகுதிகள் கனெக்ட் இந்தியா, ப்ரொபல் இந்தியா மற்றும் பாதுகாப்பான இந்தியா ஆகியவை

அனைவருக்கும் பிராட்பேண்டை கிடைப்பதை ஊக்குவிப்பதில் கனெக்ட் இந்தியா வலியுறுத்துகையில், டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு 5 ஜி, செயற்கை நுண்ணறிவு, IoT, கிளவுட் மற்றும் பிக் டேட்டா உள்ளிட்ட வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் சக்தியைப் பயன்படுத்துவதை ப்ரொபல் இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது.

பாதுகாப்பான இந்தியா குடிமக்களின் நலன்களைப் பாதுகாப்பதும், தனிநபர் சுதந்திரம் மற்றும் தேர்வு, தரவுகளுக்கான உரிமை, தனியுரிமை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வதிலும், தரவை ஒரு முக்கியமான பொருளாதார வளமாக அங்கீகரிப்பதிலும் கவனம் செலுத்துவதன் மூலம் இந்தியாவின் டிஜிட்டல் இறையாண்மையைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஒவ்வொரு குடிமகனுக்கும் 50 Mbps வேகத்தில் யுனிவர்சல் பிராட்பேண்ட் இணைப்பை வழங்குவதையும், 2022க்குள் இந்தியாவின் அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் 10 Gbps இணைப்பை வழங்குவதையும், அனைத்து முக்கிய மேம்பாட்டு நிறுவனங்களுக்கும் தேவைக்கேற்ப பிராட்பேண்ட் செயல்படுத்துவதையும், இதுவரை இணைப்பு இல்லாத அனைத்து பகுதிகளுக்கும் இணைப்பை உறுதி செய்வதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

கே: கூகுளின் தலைமை நிர்வாக அலுவலர் சுந்தர் பிச்சையுடன் பிரதமரின் கலந்துரையாடல் குறித்து ஏதாவது கருத்து கூற விரும்புகிறீர்களா? இந்தியாவின் விவசாயிகளுக்கும் இளைஞர்களுக்கும் தொழில்நுட்பம் எவ்வாறு உதவ முடியும்?

நமது பிரதமருக்கும் கூகுள் தலைமை நிர்வாக அலுவலருக்கும் இடையிலான கலந்துரையாடல் குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இருப்பினும், தொழில்நுட்பம் இந்தியாவின் விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கையை பல வழிகளில் மாற்றியமைக்கிறது.

பயனுள்ள திட்டமிடல், உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், பாதுகாப்பான சேமிப்பு மற்றும் இடைத்தரகு இல்லாமை ஆகியவற்றிற்கு இதைப் பயன்படுத்தலாம். இது ஒரு தேசிய விவசாய சந்தை (e-Nam), விவசாயத்துடன் தொடர்புடைய சேவைகளை முன்னறிவிப்பதற்கான மேக்தூட் போன்றவற்றை உள்ளடக்கியது.

இதையும் படிங்க: இந்தியா - அமெரிக்கா ஸ்பைஸ் ஜெட் விமான சேவை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.