இந்திய விமான நிலையங்களைத் தனியார்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை தொழிற்சங்கங்கள் பல்வேறு வகையில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திவருகின்றன. இந்நிலையில் புதுச்சேரி லாஸ்பேட்டையில் இயங்கும் விமான நிலையத்தில் அங்கு பணிபுரியும் ஊழியர்களும் அலுவலர்களும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.
இது குறித்து பேசிய அவர்கள், லாபகரமாக இயங்கக்கூடிய விமான நிலையங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் மத்திய அரசின் முயற்சியை கண்டித்து பயணிகள் பாதிக்காத வகையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்தனர்.