நாடு முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தூரிதமாக நடைபெற்றுவருகின்றன. வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் சுகாதாரத்துறை தீவிரமான பணிகளை மேற்கொண்டுவரும் நிலையில், அறிவியல் மூலம் பணிகளை எளிமைப்படுத்தும் முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
இதன் முக்கிய நிகழ்வாக, முன்னணி மருத்துவ அமைப்பான எய்ம்ஸ் நிறுவனத்துடன் பெல் நிறுவனம் கை கோர்த்து கரோனா பாதிப்பிற்குள்ளானவர்களை கண்காணிக்க புதிய செயல்திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.
அதன்படி, பெல் நிறுவன அறிவியலாளர்கள் புதிய செயலி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். ஒருங்கிணைந்த சென்சாருடன் உருவாக்கப்பட்டுள்ள செயலி மூலம், வைரஸ் பாதித்தவரின் உடல் வெப்பம், நாடித்துடிப்பு, ரத்த ஓட்டம், சுவாச நிலை ஆகியவற்றை ஒரே நேரத்தில் கண்காணிக்கலாம்.
இது மருத்துவ பணியாளர்களின் செயலை எளிமைப்படுத்தும். அத்துடன் எய்ம்ஸ், பெல் இணைந்து கரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள், அவர்களின் உடல் நிலை நிலவரம் ஆகியவற்றின் விவரங்களை 24 மணிநேரமும் மருத்துவர்கள் அறியும் இணைதளத்தை வடிவமைக்கும் திட்டத்தை முன்னெடுத்துவருகிறது.
இதையும் படிங்க: 'மாநில அரசுகள் கூடுதல் கடன் பெறலாம்; விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் கோடி' - ஆர்பிஐ ஆளுநர்