கரோனா வைரஸ் இறந்தவரின் உடலில் எவ்வளவு காலம் உயிர் வாழ முடியும், அப்படி இருந்தால் அதனால் நோய்த்தொற்று பரவுமா, என்று கரோனா தொற்றால் இறந்தவரின் உடலை எய்ம்ஸ் மருத்துவர்கள் பரிசோதனை செய்ய, ஆலோசனை நடந்து வருவதாக டெல்லி மருத்துவமனையின் தடயவியல் தலைவர் டாக்டர் சுதிர் குப்தா நேற்று (மே 21) தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, ’கரோனா வைரஸ் உறுப்புகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் கண்டறிய இந்த ஆய்வு உதவியாக இருக்கும். இதற்காக இறந்தவரின் சட்ட வாரிசுகளிடம் தகுந்த ஒப்புதல் பெறப்படும். மேலும் நோயியல், நுண்ணுயிரியல் போன்ற பல்வேறு துறையும் இந்த ஆய்வில் ஈடுபடவுள்ளன. கரோனா ஒரு சுவாசத் தொற்று நோயாகும். இது சுவாசிக்கும் குழாய்கள் மூலம் பரவுகிறது என்று ஏபெக்ஸ் சுகாதார ஆராய்ச்சியில் கூறப்பட்டுள்ளது.
இது முதல் முயற்சி என்பதால் இதற்குச் சரியான திட்டமிடல் வேண்டும். இது புதிதாக உருவான வைரஸ் இறந்த உடலில் எவ்வளவு நேரம் உயிர் வாழ்கிறது என்பதை அறிய இந்த ஆய்வு மிகவும் கண்டிப்பாக உதவும். இறந்த உடலில் இருக்கும் வைரஸ் நேரம் ஆக ஆக இறந்துபோகும். ஆனால், இது எவ்வளவு நேரத்தில் நடக்கும் என்று தற்போது உள்ள விஞ்ஞானத்தால் கூற முடியவில்லை. அதனால் சரியான முன்னெச்சரிக்கையுடம் நுணுக்கமான முறையில் பரிசோதனை மேற்கொள்வது மிகவும் சிறந்தது.
இவ்வாறு பரிசோதனை மேற்கொண்டால் இந்த வைரஸ் பரவ அதிகம் வாய்ப்புள்ளது. முக்கியமாக சவக்கிடங்கில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவ அதிக வாய்ப்புள்ளதால், இதனைச் சரியான தடுப்பு முறைகளைக் கொண்டு கையாளவேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.
மேலும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் உடலில் இறப்புக்கான காரணத்தை அறிய, அந்த உடலை வெட்டிப் பார்க்காமல் தெரிந்துகொள்ள முடியாது என்று பிரேத பரிசோதனை அறுவைச் சிகிச்சை நிபுணர் நினைத்தால் ஒரு குறிப்பிட்ட பகுதியை வெட்டி ஆய்வு செய்வது சிறந்தது. தற்போது வரை கரோனாவால் இறந்த உடலில் இருந்து வரையறுக்கப்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டு, குறிப்பிட்ட மாதிரிகளை பெற்றுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறுகிறது.
அதேசமயம் நோயியல் ஆய்வுகள், மருத்துவப் படிப்பு பெரும்பாலும் ஒருபாகத்தை குறித்தே அமையும். ஆனால், இந்த கரோனா நோய் இதயம், கல்லீரல், சிறுநீரகம், மூளை, ரத்த நாளங்கள் என எல்லா உறுப்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது” என்றார்.
இதையும் படிங்க: 'கரோனாவால் நீரிழிவு நோயாளிகள் இறக்க அதிக வாய்ப்பு' - அதிர்ச்சித் தகவல்!