அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர்களாகவும், அஸ்ஸாம், கேரளா பொதுச் செயலாளர்களாகவும் ஆறு பேரை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நியமித்துள்ளார்.
அதன்படி, அஸ்ஸாம் மாநிலத்திற்கு எம்எல்ஏ அனிருத் சிங், எம்எல்ஏ விகாஸ் உபத்யாய், பிருத்விராஜ் பிரபாகர் சதே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கேரளாவிற்கு முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், முன்னாள் சட்ட மேலவை உறுப்பினர் இவான் டிசோசா, பி.வி. மோகன் ஆகியோர் பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கேரள காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பி. விஸ்வநாதன் தமிழ்நாடு காஞ்சிபுரம் தொகுதி முன்னாள் எம்.பி. என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க... அஜித் தோவால் மகனிடம் மன்னிப்புக்கோரிய காங். மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ்