புதுச்சேரியில் 14-ஆவது சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது சட்டப்பேரவை தலைவர் சிவக்கொழுந்து திருக்குறள் வாசிக்கத் தொடங்கியதும் புதுச்சேரியில் மின் கட்டண உயர்வைக் கண்டித்தும் தமிழ்நாடு, புதுச்சேரியில் மின் கட்டண உயர்வு விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் திமுகவை கண்டித்தும் அதிமுக மற்றும் பாஜக உறுப்பினர்கள் பாதகைகள் ஏந்தியவாறு பேரவைக்குள் வந்தனர்.
அப்போது, நடந்துவரும் சட்டப்பேரவை கூட்டத் தொடர் துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் பெற்று நடைபெறுகிறதா என விவாதத்தில் ஈடுபட்டனர்.
துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுடனே சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறுவதாக முதலமைச்சர் தெரிவித்த பிறகும் அதிமுகவினர் வாதத்தில் ஈடுபட்டு, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அன்பழகன் ,வையாபுரி மணிகண்டன் ,பாஸ்கரன், ஆசனா ஆகியோர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்
பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன், “பட்ஜெட் தாக்கல் செய்ய இயலாத சூழ்நிலையை ஏற்படுத்தி மக்கள் விரோத ஆட்சி நடத்திவரும் காங்கிரஸ் அரசை மத்திய அரசு ஆறு மாதம் முடக்க வேண்டும், மாநில அரசு வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் துணைநிலை ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்” என வலியுறுத்தினார்.