ETV Bharat / bharat

பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளிநடப்பு செய்த அதிமுக...!

புதுச்சேரி: சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அன்பழகன்
author img

By

Published : Aug 30, 2019, 11:26 PM IST

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 26ஆம் தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அன்பழகன் தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் வெளிய வந்து செய்தியாளர்களைச் சந்தித்த அன்பழகன்; " கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களின் நலன் கருதி வேலை வாய்ப்பு, உயர்கல்விகளில் 10% இட ஒதுக்கீட்டை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. புதுச்சேரி அரசுக்கு, 37 இடங்களை அரசு கல்லூரிக்கு மத்திய அரசு கூடுதலாக அனுமதித்தது. ஆனால் 37 இடங்களில், புதுச்சேரி அரசானது தங்களுக்கு வேண்டிய மாணவர்களைக் கொண்டு நிரப்பி உள்ளது. அதே போல், ஜெயில் வார்டன் தேர்விலும் தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளது.

பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளிநடப்பு செய்த அதிமுக...

ஆனால், தமிழ்நாட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி, அவரவர்கள் கருத்துகளை கேட்டு 10% இடஒதுக்கீடு சம்மந்தமாக முடிவு எடுத்தார்.ஆனால், புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசானது, 10% இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டு, ஆனால் தற்போது அப்படியொருச் சட்டத்தை அமுல்படுத்தவில்லை என்று பொய் கூறி வருகிறது என்று கூறி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தோம்" இவ்வாறு கூறினார்.

Intro:உயர் கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் 10% இடஒதுக்கீடு வழங்கி விட்டு தற்போது புதுச்சேரியில் சட்டமாக புதுச்சேரியில் அமுல்படுத்த வில்லை என்று பொய்யான தகவல்களை முதல்வர் கூறி வருவதாக சட்டப்பேரவையை அதிமுக வெளிநடப்பு செய்ததுBody:புதுச்சேரியில் இன்று நடந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அன்பழகன் தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்பு அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அன்பழகன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு வறுமை கோட்டுக்கு கீழ் வாழும், முற்ப்படுத்தபட்டோர் நலன் கருதி வேலை வாய்ப்பு, உயர்கல்வி 10% இட ஒதுக்கீட்டை பாராளுமன்றத்தில் சட்டமாக கொண்டு வந்து வலியுறுத்தப்பட்டது. அந்த சட்டத்தை புதுச்சேரி அரசுக்கு, 37 இடங்களை அரசு கல்லூரிக்கு மத்திய அரசு கூடுதலாக அனுமதித்தது. ஆனால் 37 இடங்களில், புதுச்சேரி அரசானது குறிப்பிட்ட மாணவர்களை கொண்டு நிரப்பி உள்ளது. இதே போல் வேலை வாய்ப்பிலும் 10% இட ஒதுக்கீடு, தற்போது ஜெயில் வார்டன் தேர்வில் எடுக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, அவரவர்கள் கருத்துகளை கேட்டு 10% இடஒதுக்கீடு சம்மந்தமாக முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு, மத்திய அரசின் திட்டத்தை கண் மூடித்தனமாக அனைத்து பலனையும் அனுப்புவித்து, தற்போது உயர் கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் 10% இடஒதுக்கீடு வழங்கி விட்டு தற்போது புதுச்சேரியில் சட்டமாக புதுச்சேரியில் அமுல்படுத்த வில்லை என்று பொய்யான தகவல்களை தற்போது கூறி வரும் முதல்வர் நாராயணசாமி அவர்கள் அரசு ஒரு முதுக்கெலும்பில்லாத அரசாக உள்ளது என்று கூறி இன்று வெளிநடப்பு செய்தோம் என்று பேட்டி அளித்தார். பேட்டி: எதிர்க்கட்சித் தலைவர் அன்பழகன்.

Conclusion:உயர் கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் 10% இடஒதுக்கீடு வழங்கி விட்டு தற்போது புதுச்சேரியில் சட்டமாக புதுச்சேரியில் அமுல்படுத்த வில்லை என்று பொய்யான தகவல்களை முதல்வர் கூறி வருவதாக சட்டப்பேரவையை அதிமுக வெளிநடப்பு செய்தது

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.