மாநிலங்களவைக்கான தேர்தல் வரும் ஜூன் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குஜராத் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூன்று பேர் திடீரென ராஜினாமா செய்தனர்.
இதனால் உஷாரான காங்கிரஸ் கட்சி, ராஜஸ்தான் அபு ரோட்டில் உள்ள வைல்டுவிண்ட்ஸ் சொகுசு விடுதியில் அதன் சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தங்கவைத்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் குலாப் சிங் ராஜ்புட் கூறுகையில், "மாநிலங்களவை தேர்தலைக் காங்கிரஸ் எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளோம். இதற்கு மேல் ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் கூட கட்சியை விட்டு வெளியேறமாட்டார்கள். மக்களை ஏமாற்ற நினைத்தவர்கள் கட்சியை விட்டு வெளியேறிவிட்டனர். அவர்களை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்" என்றார்.
இதையும் படிங்க : 'கேரள வனத்துறை மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது'