ETV Bharat / bharat

சட்டப்பேரவை தேர்தல் எதிரொலி: தாய்லாந்தில் இருந்து நாடு திரும்பினார் ராகுல் காந்தி

author img

By

Published : Oct 6, 2019, 10:22 AM IST

டெல்லி: சட்டப்பேரவை தேர்தலில் பரப்புரை மேற்கொள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாங்காங்கில் இருந்து நாடு திரும்பினார்.

Rahul Gandhi

சட்டப்பேரவை தேர்தல்

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் வரும் 21ஆம் தேதி நடக்கிறது. நரேந்திர மோடி பிரதமராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பின்னர் நடக்கும் தேர்தல் என்பதால் இத்தேர்தல் கவனம் பெறுகிறது.
நரேந்திர மோடியின் அரசியல் மதிப்பீடாக இத்தேர்தல் இருக்க போகிறது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நாடு திரும்பினார்

இந்த நிலையில் தாய்லாந்து நாட்டில் ஓய்வை முடித்துக் கொண்டு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று நாடு திரும்பி விட்டார் என ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில், ராகுல் காந்தி தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காங்கின் விஸ்தாரா விமான நிலையத்தில் இருந்து நாடு திரும்பியதாக கூறப்படுகிறது.

குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சிக்கு தற்போது போதாத காலமாக இருக்கிறது. ஹரியானா சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அம்மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அப்போது, ராகுல் காந்தியால் வளர்க்கப்பட்டவர்கள் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்படுகிறார்கள் என்று குற்றம் சுமத்தி இருந்தார். மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா, சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஹரியானா மாநிலத்தில் பாரதிய ஜனதாவின் மனோகர் லால் கட்டார் முதலமைச்சராக உள்ளார்.

இதையும் படிக்கலாமே

பாஜக-சிவசேனா இடையே தொகுதி பங்கீடு உறுதியானது!

'பாஜக-சிவசேனா கூட்டணி விரைவில் முறிந்துவிடும்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.