உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு பலியானார்.
ஆனால் இந்தப் பெண்ணின் உடலை எடுத்துச் செல்ல யாரும் வராத சூழலில், ஆக்ரா காவல் துறையினர் தானாக முன்வந்து அவரை இந்து முறைப் படி அடக்கம் செய்து, இறுதிச் சடங்கு நடத்திவைத்தனர்.
இதுகுறித்து காவல் துறை கண்காணிப்பாளர் போட்ரே ரோஹன் பிரமோத் கூறுகையில்,"பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அடையாளம் தெரியாத பெண் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். ஆனால், அவரது உடலை எடுத்துச் செல்ல யாரும் வரவில்லை.
இதன் காரணமாக, காவல் துறையினர் தாங்களாகவே பொறுப்பேற்றுக்கொண்டு அப்பெண்ணின் இறுதிச் சடங்குகளை நடத்திவைத்தனர். இது பாராட்டுதற்குரியது. இதுபோன்ற செயல்கள் காவல் துறை, மக்கள் இடையேயான இடைவேளையைகுறைக்கும்" என்றார்.
இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. யார் என்று அடையாளம் தெரியாத பெண்ணுக்கு முறைப்படி இறுதிச் சடங்கு நடத்திவைத்த ஆக்ரா காவல் துறையினருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படிங்க : சப்பாக் திரைப்படத்திற்கு வரி விலக்கு!