கரோனா வைரஸ் நோய் இந்தியாவை ஆட்டம் காண செய்துள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகிரித்துவருகிறது. இதனிடையே, உலகின் மிக பெரிய குடிசை பகுதியான தாராவியில் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுபவர்களை அங்கிருந்து வலுகட்டாயமாக வெளியேற்ற மகாராஷ்டிரா அரசு திட்டமிட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தகுந்த இடைவெளி கடைபிடித்தல், தனிமைப்படுத்துதல் ஆகியவை வைரஸ் பரவலை தடுக்க முக்கிய நடவடிக்கைகளாக பார்க்கப்படுகிறது. ஆனால், இட நெருக்கடி அதிகுமுள்ள தாராவியில் அவற்றை மேற்கொள்வது இயலாத ஒன்று. இதுகுறித்து மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் கூறுகையில், "தாராவியில் உள்ள வீடுகள் சிறியதாக உள்ளதால், ஒரு வீட்டில் 10 முதல் 12 பேர் வசிப்பர். தனிமைப்படுத்த ஆலோசனை கூறினால், அங்கு நிலவும் இட நெருக்கடி அதன் நோக்கத்தை செயல்படுத்த உதவாது.
கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள். இதுகுறித்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிடம் ஆலோசனை நடத்தியுள்ளோம். இட நெருக்கடி நிலவுவதால் வீட்டில் தனிமைப்படுத்துவது உதவாது என அவர்களும் ஒத்துக் கொண்டனர். எனவே, தனிமைப்படுத்த பள்ளி மைதானங்களை பயன்படுத்தலாம்" என்றார்.
இதையும் படிங்க: இந்தூரில் மட்டும் ஆயிரம் பேருக்கு கரோனா!