ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான
ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் மாதம் சிபிஐயால் கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதே வழக்கில் சிதம்பரத்தை அமலாக்கத்துறை சிறையில் வைத்தே விசாரணை நடத்தி, பின்னர் கைது செய்தது.
இதையடுத்து ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அக்டோபர் 21ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: ப. சிதம்பரத்திற்கு வீட்டு உணவு வழங்க நீதிமன்றம் அனுமதி