ஜார்க்கண்ட் மாநிலத்தின் 81 தொகுதிகளுக்கும் சட்டப்பேரவை தேர்தல் ஐந்து கட்டங்களாக நடைபெற இருக்கிறது. அதில் முதல் கட்டத் தேர்தல் வரும் நவம்பர் 30ஆம் தேதியும், அடுத்த நான்கு கட்ட தேர்தல்கள் டிசம்பர் 20ஆம் தேதி வரையும் நடக்கவிருக்கின்றன.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த ஒரு மாத காலமாக எவ்வித அரசியல் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் மற்றும் நினைவு தினத்திலும் கூட, காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்த எந்த ஒரு நிகழ்ச்சியிலும் ராகுல் காந்தி பங்குபெறவில்லை.
தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் காங்கிரஸின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர்களது பெயர்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால், இவர்கள் ஜார்க்கண்ட் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதாக எந்தவித அறிவிப்பும் இதுவரை இல்லை.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 7ஆம் தேதி ஜார்க்கண்டில் நடைபெற நிலையில், வரும் 2ஆம் தேதி ராகுல் காந்தி சிம்தேகா தொகுதியில் (Simdega) பரப்புரை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: முதலமைச்சராகும் உத்தவ்: சோனியா, மன்மோகனுக்கு அழைப்பு