மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய தொழிலாளர் மசோதாக்கள் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் பதிவில் அவர், "முதலில் விவசாயிகள், தற்போது தொழிலாளர்கள். மோடியின் அரசு தனது பெரும் முதலாளி நண்பர்களின் நலனுக்காக, ஏழைகளைச் சுரண்டும் செயலைத் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது" எனத் தெரிவித்தார்.
அரசு அண்மையில் நிறைவேற்றிய மூன்று வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடு தழுவிய போராட்டம் நடத்திவருகின்றன.
இந்த விவகாரம் பூதாகரமாக கிளம்பியுள்ள நிலையில் மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் மூன்று மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் அவையைப் புறக்கணித்த நிலையில் இதுபோன்ற முக்கியச் சட்டங்களை அரசு நிறைவேற்றியுள்ளது ஜனநாயக விரோதசெயல் என காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டிவருகின்றன.
இதையும் படிங்க: கார்ப்பரேட்மயத்திற்கு எதிரான பெரும் போராட்டத்தை நாம் பார்க்கப் போகிறோம்: யோகேந்திர யாதவ்