ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் ஷகிப் ஃபகிர். இவர், குஜராத் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வணிக நிறுவாகம் (பிபிஏ) படித்துவந்தார். இந்நிலையில், இன்று (ஜூன் 17) காலை பல்கலைக்கழகம் விடுதியின் வெளியே இருந்த மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக பல்கலைக்கழக அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
பல்கலைக்கழக தேர்விற்காக தயார் ஆகிவந்த ஷகிப், சக மாணவர்கள் உறங்கிக் கொண்டிந்த போது, விடுதியின் வெளியே இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும், இதற்கான காரணம் தெரியவில்லை என்றும் அப்பகுதி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனிரூத் சிங் கூறியுள்ளார்.
மாணவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், தற்கொலை செய்துகொண்ட மாணவர் தேர்வு குறித்து மன உளைச்சலில் இருந்ததாகவும், அவரது இளங்கலை படிப்பிற்கான கால அவசம் முடிந்த நிலையில், தான் பட்டயம் பெறுவதற்கு இன்னும் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து வந்ததாகவும், இதன் காரணமாக கூட ஷகிப் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.