ETV Bharat / bharat

காஷ்மீரின் பிரபல வழக்கறிஞர் பாபர் காத்ரி சுட்டுக்கொலை

author img

By

Published : Sep 25, 2020, 1:13 AM IST

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் பாபர் காத்ரி பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Advocate Babar Qadri
Advocate Babar Qadri

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பிரபல இளம் வழக்கறிஞர் பாபர் காத்ரி, ஹவால் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். நாற்பது வயதே ஆன இளம் வழக்கறிஞரான பாபர், தொடர்ச்சியாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்றும், செய்தித்தாள்களில் முக்கியக் கட்டுரைகளை எழுதி வருபவரும் ஆவார்.

இவரது கருத்துக்களும் செயல்பாடுகளும் பிரிவினைவாதிகளுக்கு பிடிக்காமல் இருந்து வந்த நிலையில், அவர் தற்போது படுகொலை செய்யப்பட்டுள்ளார். மூன்று நாட்களுக்கு முன்னதாக தன் மீது அவதூறு பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜம்மு காஷ்மீர் காவல்துறைக்கு புகார் ஒன்றை பாபர் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், தனது இல்லத்தில் வைத்தே பயங்கரவாத சக்திகளால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். முன்னதாக இதேபோல் கடந்த புதன் கிழமை (செப்.23) புத்காம் மாவட்டத்தைச் சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பூபின்தர் சிங் பயங்கரவாத சக்திகளால் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. கரோனாவுக்கு பலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.