ETV Bharat / bharat

அடிக்கல் நாட்டு விழாவிற்கு அத்வானிக்கும் ஜோஷிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதா? - எல்.கே. அத்வானி

டெல்லி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கும், முரளி மனோகர் ஜோஷிக்கும் தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டது என ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை விளக்கமளித்துள்ளது.

advani-joshi-invited-to-ayodhya-bhoomi-pujan-ram-mandir-trust

author img

By

Published : Aug 2, 2020, 10:36 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 5) அன்று ராமர் கோயிலுக்கான பூமி பூஜை நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, கோயில் கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவார் எனத் தெரிகிறது.

இவ்விழாவில், ஆன்மிகத் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை விழாவிற்கான ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்திவருகிறது.

இதற்கிடையில், 1992ஆம் ஆண்டு ராமர் கோயில் இயக்கத்தை வழிநடத்தி, கர சேவர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த இயக்கத்திற்குத் தலைமை தாங்கிய பாஜக மூத்த தலைவர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை என பல்வேறு தகவல்கள் வெளியாகின.

இதற்கு தற்போது ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையைச் சேர்ந்த குப்தா பதிலளித்துள்ளார். இதுபோன்ற தகவல்கள் சர்ச்சையை ஏற்படுத்துவதற்காகப் பரப்பப்படுகின்றன. கோயில் இயக்கத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்வானி, ஜோஷி உட்பட அனைத்து முக்கிய நபர்களுக்கும் அஞ்சல் மூலமும் தொலைபேசி வாயிலாகவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளை அனைவரின் எண்ணங்களையும் மதிக்கிறது. குறுகிய காலத்தில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டதாலும், தொற்று பரவல் அதிகளவில் உள்ளதாலும் அனைவருக்கும் நேரடியாகச் சென்று அழைப்பு விடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

தபால் மூலம் அழைப்பு விடுத்தால் அவை உரிய நேரத்தில் சென்றடையுமா என்ற சந்தேகம் நிலவுவதால், அனைவருக்கும் இ-மெயில் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் அழைப்பு விடுக்கப்பட்டது” என்றார்.

இதுகுறித்து அத்வானியின் நெருங்கிய வட்டாரங்களைத் தொடர்புகொண்டபோது, விழாவிற்குச் செல்வது குறித்து எவ்வித முடிவும் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கின்றன. முரளி மனோகர் ஜோஷி நேற்றுவரை தனக்கு எவ்வித அழைப்பும் வரவில்லை என்றும், இன்று விடுப்பில் இருப்பதால் அழைப்பு குறித்த எந்தத் தகவலும் தெரியவில்லை எனவும் கூறினார்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு தலைவர்கள் காணொலிக் காட்சி மூலம் விழாவில் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.