நாம் பள்ளி படிப்பை முடித்து, கல்லூரியில் நுழையும் போது வெவ்வேறு சூழ்நிலைகளில் வளரப்பட்ட பல விதமான மனிதர்களை சந்திக்க நேரிடும். குறிப்பாக அந்த இளமை பருவத்தில் தான் பல விதமான ஆசைகள் மனிதில் தோன்றும். நாம் பார்க்கும் நபர்களை போலவே உடை வாங்கி அணிவது, முடிவெட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோம். சிலர் சினிமா நடிகர், நடிகைகளால் கவரப்பட்டு அவர்களை போல் நடந்து கொள்வார்கள். இந்த மாற்றமானது, கூட்டத்தில் நமக்கு என்ற தனி அடையாள வேண்டும் என்ற நினைப்பில் தான் வருகிறது. இதுகுறித்து கூடுதல் தகவல்களுக்காக மும்பையின் பிரஃபுல்டா உளவியல் ஆரோக்கிய மையத்தில் பணிபுரியும் உளவியலாளர் காஜல் யு. டேவ்வை அணுகினோம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "சாதாரணமாக ஒரு இளைஞரிடம் உங்களிடம் நீங்கள் மாற்ற விரும்புவது எது என்ற கேட்டால், சற்றும் யோசிக்காமல் உடலமைப்பு தான் என கூறுவார்கள். சிலருக்கு வயிறு தட்டையாக இருக்க வேண்டும். சிலருக்கு உடல் கட்டமைப்பு அழகாக இருக்க வேண்டும். இவற்றை எதிர்பார்பதும் தவறு கிடையாது. ஆனால், அவற்றை அடையவதற்கு பின்பற்றும் வழிகளை தெரிந்திருக்க வேண்டும். சீக்கரமாக உடலில் பலம் வர வேண்டும் என பிற்காலத்தில் கெடு தரும் உணவுகளை பெரும்பாலானோர் சாப்பிடுகின்றனர். இவற்றால், உடலில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இவற்றை சரியாக கவனிக்காவிட்டல், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படக்கூடும். உடல் ரீதியாக மனதில் குழப்பங்கள் வரும் சமயத்தில், அவற்றை சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.நம் உடலின் ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் உறுதிசெய்ய சிலவற்றை பின்தொடர வேண்டும்.
செய்யக்கூடாதவை
உங்கள் நண்பர் அல்லது பிரபலங்களை முன்மாதிரியாக எடுத்து ஒப்பிட வேண்டாம்.
ஊட்டச்சத்து நிபுணரின் அறிவுரை இல்லாமல் தேவையில்லாத உணவுகளை ஊட்டச்சத்துக்காக சாப்பிட கூடாது.
நான் குண்டாக இருக்கிறேன், அழகாக இல்லை என்ற சொற்களை பயன்படுத்த கூடாது.
அவ்வப்போது கலோரிகளையும் எடையையும் எண்ணுவதைத் தவிர்க்க வேண்டும்.
செய்யக்கூடியவை:
உங்களின் உடல் கட்டமைப்பு குறித்து கவலை கொள்ளாமல், அதை தவிர பல விஷயங்கள் ஒரு நபரை வலிமையாகவும் அழகாகவும் ஆக்குகின்றன என்பதை உணர்ந்து உங்கள் மனதிற்குள்ளேயே கேள்வி கேட்க வேண்டும்.
மனிதில் தோன்றும் குழப்பங்களுக்கு விடை தேட முயற்சி செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக, உடல் அழகாக இருந்தால் தான் பிரபலமாக முடியும் என்று இல்லை, குண்டானவர்கள், கருப்பாக உள்ள பலரும் பிரபல மாடல்களாக திகழ்ந்து வருகின்றன.
உங்களை விரும்புவோர் இடத்தில் புதிய நண்பர்களை ஏற்படுத்துங்கள்
குறிப்பாக, மக்களை எதிர்கொள்ளும் போது நம்பிக்கையுடன் இருங்கள், ஏனென்றால் உங்களிடம் உள்ள திறமையைப் பார்க்க மக்கள் வருகிறார்கள், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதை அல்ல. இதை புரிந்துக்கொண்டால் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமாக மாறிவிடும்.