புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை தொடங்கியது. கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே எழுந்து பேசிய அதிமுக சட்டப்பேரவைக் குழு தலைவர் அன்பழகன், திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி பெயரில் பல்வேறு திட்டங்களை அறிவிக்கும் இந்த அரசு, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலை வைக்க பல கோரிக்கைகள் வைத்தும் இதுவரை பதில் அளிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
இவ்வாறு செய்ததற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்ததை விமர்சித்தும் அவர் அவையில் பேசினார். இதற்கு காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள் அன்பழகன், வையாபுரி, மணிகண்டன், பாஸ்கர் ஆகியோர் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன், மக்களின் உள்ளத்தில் என்றும் வாழும் ஜெயலலிதாவின் உருவச்சிலை வைக்க பல்வேறு கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளாத இந்த காங்கிரஸ் அரசு, பல்வேறு திட்டங்களை அறிவித்து ஏமாற்றுகிறது என்று குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: கிரண் பேடியை கண்டித்து 2ஆவது நாளாக சுகாதார ஊழியர்கள் போராட்டம்!