நாடு முழுவதும் விமான நிலையங்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பை கவனிக்கும் பொறுப்பை பொதுத் துறை – தனியார் கூட்டு (பி.பி.பி.) என்ற பெயரில் 50 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் அதானி குழுமத்திடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
அகமதாபாத், லக்னோ, பெங்களூரு, திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், கவுஹாத்தி ஆகிய நகரங்களின் விமான நிலையங்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் அதானி குழுமத்துடன் பிப்.14ஆம் தேதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் மங்களூரு விமான நிலையத்தில் நிர்வாகம், பராமரிப்புப் பணிகளை அதானி குழுமம் கடந்த சனிக்கிழமை கையப்படுத்தியுள்ளது. இதேபோல் வரும் நவம்பர் 2, 7 ஆகிய தேதிகளில் அகமதாபாத், லக்னோ ஆகிய நகரங்களின் விமான நிலையத்தின் செயல்பாட்டுப் பணிகளையும் அதானி குழுமம் கையகப்படுத்தவுள்ளது.
இதையும் படிங்க: திருவனந்தபுரம் விமான நிலையம் : 'மத்திய அரசுக்கு கேரளா ஒத்துழைப்பு வழங்காது' - முதலமைச்சர் தடாலடி!