ETV Bharat / bharat

ரூ.20 லட்சம் கோடியல்ல, வெறும் ரூ.4 லட்சம் கோடிதான்  - கபில் சிபல் தாக்கு

டெல்லி: மத்திய அரசு அறிவித்துள்ள பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தின் மதிப்பு 20 லட்சம் கோடி ரூபாய் அல்ல, வெறும் நான்கு லட்சம் கோடி ரூபாய்தான் என்று காங்கிரஸ் கட்சியின் கபில் சிபல் விமர்சித்துள்ளார்.

Kapil Sibal
Kapil Sibal
author img

By

Published : May 13, 2020, 2:11 PM IST

கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 17ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்கள் அறிவிக்கப்படும்.

இது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 விழுக்காடு. இந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் நாட்டின் பலதரப்பட்ட மக்கள் பயன்பெறுவர். அடுத்து இரண்டு மூன்று நாள்களில் இது குறித்த தகவல்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுவார்" என்றார்.

இந்நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தின் மதிப்பு 20 லட்சம் கோடி ரூபாய் அல்ல, வெறும் நான்கு லட்சம் கோடி ரூபாய்தான் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் கபில் சிபல் விமர்சித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு, அரசின் மற்ற திட்டங்களின் மதிப்பைக் கழித்துவிட்டுப் பார்த்தால் இந்தப் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தின் உண்மையான மதிப்பு வெறும் நான்கு லட்சம் கோடி ரூபாயாக மட்டுமே இருக்கும் என்று வல்லுநர்கள் கருதுவதாக கபில் சிபல் தனது ட்விட்டர் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

  • PM says :

    Financial Package : 20 2020

    Of ₹20 lakhs cr. experts say :

    Govt. cash outflow only ₹4 lakh cr.

    Rest :
    RBI injected into system ₹8 lakh cr.
    Additional govt. borrowings over ₹ 5lakh cr.
    ₹1 lakh cr. revolving guarantee

    Actual financial package :

    4 2020

    — Kapil Sibal (@KapilSibal) May 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பிரதமர் அறிவித்த பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்கள் குறித்த தகவல்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை நான்கு மணிக்கு அறிவிக்கிறார்.

இதையும் படிங்க: குடும்பங்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது என்பது ஆராயப்படும் - சிதம்பரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.