ETV Bharat / bharat

பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளும் நடிகர் ரஜினி - pm modi

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினி
author img

By

Published : May 27, 2019, 5:14 PM IST

17ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கவுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவியேற்கவுள்ளார். இந்த நிகழ்ச்சி வருகின்ற 30ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்கும்படி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்களுக்கு பாஜக சார்பில் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திரை பிரபலங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு இந்த அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மும்பையில் நடைபெறும் 'தர்பார்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ள நாளை அவர் மும்பை செல்கிறார். பின்பு வருகின்ற 30ஆம் தேதி அங்கிருந்து டெல்லியில் நடைபெறும் பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்துக் கொள்ளவுள்ளார்.

இதேபோன்று, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசனுக்கு பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அழைப்பிதழ் கட்சி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அழைப்பிதழ் குறித்து அக்கட்சியின் தலைவர் கமலஹாசனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இந்த நிகழ்வில் கலந்து கொள்வாரா இல்லையா என்பது குறித்து இன்னும் அவர் முடிவு எடுக்கவில்லை என்றும், கமலஹாசனின் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும் நடிகர் ரஜினிகாந்த் .

நடந்து முடிந்த நாடாளு மன்ற தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி பெரும்பான்மையான  வெற்றி பெற்று மீண்டும் மத்தியில் இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சி டெல்லியில் வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த  நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழக சினிமா துறை மற்றும் அரசியல் பிரபலங்களான  நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் கமல்ஹாசனுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது 

இந்நிலையில்,  நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் தர்பார் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து தற்போது மீண்டும் இரண்டாம் கட்ட பிடிப்பு நாளை மறுநாள் துவங்க உள்ளது  இதற்காக நடிகர் ரஜினிகாந்த் மும்பை செல்ல உள்ளார் மும்பை சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டு பிறகு. மும்பையில் இருந்து வரும் 30 ஆம் தேதி டெல்லிக்கு  சென்று பதவியேற்பு  விழாவில்  கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

இதேபோன்று, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசனுக்கு பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அழைப்பிதழ் கட்சி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அழைப்பிதழ் குறித்து  அக்கட்சியின் தலைவர் கமலஹாசனின்  கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வாரா இல்லையா என்பது குறித்து இன்னும் அவர் முடிவு எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது கமலஹாசனின் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.