ETV Bharat / bharat

பிரபல நடிகர் பிருத்விராஜுக்கு கரோனா! - movie Janaganamana

பிரபல தமிழ், மலையாள நடிகரான பிருத்விராஜ் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Actor Prithviraj Sukumaran tested covid positive

author img

By

Published : Oct 20, 2020, 3:09 PM IST

கொச்சி: தமிழ், மலையாளம், இந்தி திரைப்படங்களில் நடித்துவருபவர் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன். இவர் தமிழில் மொழி, சத்தம் போடாதே நினைத்தாலே இனிக்கும், கனா கண்டேன், காவியத் தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த அய்யப்பனும் கோஷியும் திரைப்படம் தமிழ், மலையாள ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

சில மாதங்களுக்கு முன்பு திரைப்படப் படப்பிடிப்பிற்காக ஜோர்டன் சென்ற இவர், கரோனா வைரஸ் தொற்று காரணத்தினால், அந்நாட்டிலேயே சிக்கிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டது.

பின்னர், கடந்த ஜூன் மாதம் நாடு திரும்பிய அவர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் உருவாகிவரும் ஜனகனமன திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

இந்நிலையில், சில நாள்களுக்கு முன் டிஜோ ஜோஸ் ஆண்டனிக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, நடிகர்கள் பலரும் கரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அதில், நடிகர் பிருத்விராஜுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டது. இத்தகவலை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் அவர், தான் தொற்றிலிருந்து விரைவில் குணமடைந்து இயல்புநிலைக்குத் திரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

இவர் நடிகர் மட்டுமின்றி திரைப்படத் தயாரிப்பாளர், பாடகர் என்ற பன்முகத் தன்மை கொண்டிருப்பவர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.