ETV Bharat / bharat

எல்கர் பரிஷத் வழக்கு: பாஜகவுக்கு அடுத்த செக்... அதிரவைக்கும் சரத் பவார்! - Activists' arrest in Elgar Parishad case

மும்பை: எல்கர் பரிஷத் வழக்கில் சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டது தவறு; பழிவாங்கும் செயல் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சாடினார்.

Elgar Parishad case  Activists' arrest in Elgar Parishad case  Activists' arrest in Elgar Parishad case wrong, form SIT to probe police action: Pawar
Activists' arrest in Elgar Parishad case wrong, form SIT to probe police action: Pawar
author img

By

Published : Dec 21, 2019, 10:59 PM IST

எல்கர் பரிஷத் மாநாடு

2017 டிசம்பர் 31ஆம் தேதி புனேயில் உள்ள ஷானிவார்வாடா பகுதியில் எல்கர் பரிஷத் மாநாடு நடந்தது. மாவோயிஸ்ட்டுகள் ஆதரவு தெரிவித்த அந்த மாநாட்டில் பங்கேற்ற ஏராளமான சமூக செயற்பாட்டாளர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசினார்கள். இதன் எதிரொலியாக அடுத்தநாள் காலை பயங்கர கலவரம் வெடித்தது.

அந்தக் கூட்டத்தில் கலவரத்தினை தூண்டும்வகையில் பேசிய ஐந்து பேரை, காவல் துறையினர் ஜூன் மாதம் கைது செய்தனர். அவர்கள்...

  • வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங்,
  • தலித் உரிமைகளுக்கான போராளி சுதிர் தாவாலே,
  • பிரதம அமைச்சரின் ஊரக வளர்ச்சித் திட்டத்தில் முன்பு பணியாற்றிக்கொண்டிருந்த மகேஷ் ராவுட்,
  • நாக்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் ஷோமா சென்,
  • டெல்லியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ரோனா வில்சன் ஆகியோர்.

ராஜிவ் போல மோடிக்கு...!

இதில் ரோனா வில்சனின் இருப்பிடத்திலிருந்து மோடியை கொலை செய்யத் திட்டமிட்ட மாவோயிஸ்ட்டுகளின் துண்டுப் பிரசுரங்கள் கைப்பற்றப்பட்டன. அதில், ராஜிவ் காந்தியை கொலை செய்தது போலவே ஒரு திட்டத்தினைத் தீட்டி மோடியை கொலை செய்யும் நோக்கிலான திட்டங்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தன.

அந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டது தவறு; பழிவாங்கும் செயல்

இந்த நிலையில், சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டது தவறு; பழிவாங்கும் செயல் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விரிவாக விவரிக்கையில், “எல்கர் பரிஷத் வழக்கில் சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டது தவறானது; பழிவாங்கும் செயலாகும். முந்தைய அரசு (பாஜக-சிவசேனா கூட்டணி) ஒருசார்பு தன்மைகொண்டதாக இருந்தது. அதன் நீட்சியே இந்தக் கைது நடவடிக்கை.

எல்கர் பரிஷத் வழக்கை சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும். இந்த கைது நடவடிக்கையில் ஈடுபட்ட காவலர்களை இடைநீக்கம் செய்ய வேண்டும்.

தேசத்துரோக குற்றச்சாட்டில் சமூக செயற்பாட்டாளர்களைச் சிறையில் அடைப்பது தவறு. ஜனநாயகத்தில் தீவிரமான கருத்துகளுக்கு குரல் கொடுக்க அனுமதிக்கப்படுகிறது. இதில் காவல் ஆணையர், சில அலுவலர்கள் தங்களின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினார்கள்” என்றார்.

இதையும் படிங்க: நிரபராதியான அஜித் பவார் - ஊழல் தடுப்புப் பிரிவு அறிக்கை தாக்கல்!

Intro:Body:

Activists' arrest in Elgar Parishad case wrong, form SIT to probe police action: Pawar

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.