பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
அதன் முக்கிய அங்கமாக பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கும் ஆளும் சிவசேனா கட்சிக்கும் இடையே கடும் மோதல் உருவாகியுள்ளது.
சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் மற்றும் கங்கனாவுக்கு இடையே நிகழ்ந்த வார்த்தைப் போரானது அம்மாநிலத்தில் புயலேன கிளம்பியுள்ளது.
மும்பை நகர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல மாறியுள்ளது என கங்கனா கூற, மகாராஷ்டிராவை அவமதித்த கங்கனாவை மும்பைக்குள் விடக் கூடாது என சிவசேனா சார்பில் ஆவேச கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இந்தச் சூழலில் கங்கனா ரணாவத்திற்கு சொந்தமான பங்களா விதிமுறை மீறி கட்டப்பட்டதாகக் கூறி இன்று மாநகராட்சி நிர்வாகம் அந்தக் கட்டடத்தை இடித்தது.
மகாராஷ்டிரா அரசின் இந்த நடவடிக்கை ஒரு அரசியல் பழிவாங்கும் செயல் என அம்மாநில எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான தேவேந்திர பட்னாவிஸ் குற்றாஞ்சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிரா அரசின் இந்த கோழைத்தனமான செயல் ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது என பட்னாவிஸ் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பிளாஸ்டிக்கைத் தவிர்த்து மண் பானை பயன்படுத்துங்கள் - வியாபாரிகளுக்கு பிரதமர் கோரிக்கை