ETV Bharat / bharat

தண்ணீர் டிராக்டர் மோதி உயிரிழந்த இளைஞர்! - accident near by sayalkudi youth died

ராமநாதபுரம்: சாயல்குடி அருகே தண்ணீர் டிராக்டர் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

தண்ணீர் டிராக்டர் மோதி உயிரிழந்த இளைஞர்!

author img

By

Published : Oct 10, 2020, 7:43 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள ரோச்மா நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி ராயப்பன் (35). ரோச்மாநகர் கிராமத்திலிருந்து சாயல்குடி நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்துகொண்டிருந்தார்.

கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள நரிப்பையூரை அடுத்த மாணிக்கம் நகர் அருகே வந்துகொண்டிருந்தபோது, சாலையின் குறுக்கே வந்த தண்ணீர் டிராக்டர் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த அந்தோணி ராயப்பன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

தகவலறிந்து விரைந்துவந்த சாயல்குடி காவல் துறையினர் அவரது உடலை மீட்டு கடலாடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதவி செய்து விசாரணை நடத்திவருகின்றனர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.