லண்டனிலிருந்து இந்தியா திரும்பிய பாலிவுட் பாடகி கனிகா கபூர், மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளாமல் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இதனிடையே இவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. கனிகா கபூர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே, அவரது மகன் துஷ்யந்த் சிங் ஆகியோரும் கலந்துகொண்டதால், அவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது.
இதையடுத்து நாடாளுமன்றத்தில் ராஜஸ்தான் மாநிலங்களவை உறுப்பினர் துஷ்யந்த் சிங்குடன், தீபேந்தர் சிங் ஹூடா சந்தித்தார். இதனால் இவருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினர் தீபேந்தர் சிங் ஹூடா விடுத்துள்ள அறிக்கையில், '' நான் மிகவும் ஆரோக்கியமாக உள்ளேன். அடுத்த 15 நாள்களுக்கு எனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்யவிட்டேன். என்னை நானே தனிமைப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன்'' என்றார்.
மேலும் வசுந்தரா ராஜே, அவரது மகன் துஷ்யந்த் சிங் ஆகியோருக்கு நடந்த கரோனா வைரஸ் கண்டறியும் சோதனையில், கரோனா பாதிப்பு இல்லை என்ற முடிவு வந்தது. இருந்தும் அவர்கள் இருவரும் 15 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகிக்கு எதிராக வழக்கு!