கரோனா வைரஸ் பொதுவாக விலங்குகளைத் தாக்கும். விலங்குகள் வழியாக மனிதர்களைத் தாக்குவதில்லை. ஆனாலும் சில அரிய நிகழ்வுகள் நடக்கின்றன.
இந்த வகை வைரஸ்கள் மக்களைத் தாக்கி சுகவீனப்படுத்தி குளிர் காய்ச்சலில் தள்ளுகின்றன. நிமோனியா என்ற இந்த வகை காய்ச்சல் தாக்கினால் மரண தருவாயில் போராடும் சூழல் உருவாகும்.
அறிகுறிகள்
கரோனா காய்ச்சல் ஏற்பட்டால் கீழ்கண்ட அறிகுறிகள் தென்படலாம். அவையாவன:
- காய்ச்சல்,
- நெஞ்சுவலி,
- குளிர்,
- சீரற்ற இதயத் துடிப்பு,
- மூச்சுத் திணறல்,
- நிமோனியா,
- சிறுநீரகம் செயலிழப்பு,
- தலைவலி,
- தொண்டை வலி,
- இருமல்
பரவுதல்
கரோனா வைரஸ் ஒரு மனிதனிடமிருந்து மற்றொரு மனிதனுக்கு எளிதில் பரவிவிடுகிறது. ஒருவருடன் கைக்குலுக்குதல் மூலமாக கொரனோ வைரஸ் தாக்கியவர் கைரேகை மீது நம் கை ரேகைபடுதல், இருமல், மூக்கு ஒழுகல், கண்ணீர் ஆகியவற்றின் வழியாகவும் பரவிவிடுகிறது. அரிதாக மலம் வழியாகவும் பரவிவிடுகிறது.
பாதுகாப்பு
கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் மருந்துகள் தற்போது நம்மிடம் இல்லை. எனினும் அதன் பரவலைத் தடுக்கலாம். தினமும் கைகளை சோப்பு பயன்படுத்தி நன்றாகக் கழுவ வேண்டும்.
கைகளைக் கழுவாமல் கண்கள், மூக்கு, வாய் உள்ளிட்ட உறுப்புகளைத் தொடக் கூடாது. உடல்நலம் சரியில்லாதவர்களிடம் நெருங்க வேண்டாம். காய்ச்சல் ஏற்பட்டால் வீட்டில் ஓய்வெடுக்கவும். தொடர்ந்து உடல்நிலை சீராக இருக்காதபட்சத்தில் மருத்துவரை அணுகவும்.
முன்னெச்சரிக்கை
கரோனா வைரஸின் முக்கிய அறிகுறி நீரொழுகும் மூக்கு, வறண்ட தொண்டை, தலைவலி, இருமல், காய்ச்சல், சுகவீனமாக இருப்பது போன்ற உணர்வுகள். கொரனோ வைரஸ் பொதுவாக காற்றின் மூலமாகவும் பரவுகிறது. ஆகவே இந்த வைரஸிடம் கவனம் தேவை.
தகுந்த முன்னெச்சரிக்கை உணர்வுடன் இருத்தல் அவசியம். கரோனா வைரஸ் சீனாவில் மீண்டும் தலைதூக்கியுள்ளது. சீனாவிலிருந்து இந்தியாவுக்கும் வைரஸ் தாக்கும் அபாயம் இருப்பதால், சர்வதேச விமான நிலையத்தில் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : கரோனா வைரஸ்: பிரான்ஸில் இருவருக்கு பாதிப்பு!