புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட பாகிஸ்தான் விமானங்களை இந்திய விமானப்படை விரட்டி அடித்தது. அப்போது பாகிஸ்தான் வசம் விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் சிக்கினார். பின்னர் இரண்டு நாட்களில் பாகிஸ்தான் அரசு அவரை விடுவித்தது.
இதனையடுத்து தாயகம் திரும்பிய அபிநந்தனுக்கு எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர்,டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அபிநந்தன் சிகிச்சை பெற்று வந்தார். இதைத்தொடர்ந்து பாகிஸ்தானில் நடந்தவை குறித்து அவரிடம்விசாரணை நடத்தப்பட்டது.
இதற்குப்பின் அவருக்கு 4 வார மருத்துவ விடுப்பு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவ்விடுப்பு காலத்தில் அபிநந்தன் தன் பெற்றோர் உள்ள சென்னைக்கோ அல்லது வேறு எங்கும் ஒய்வெடுக்காமல் ஸ்ரீநகரில் தான் பணியாற்றும் விமானப்படை குழு உள்ள இடத்திற்கே சென்று விட்டதாகத்தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், 4 வார விடுப்பு முடிந்தவுடன் அபிநந்தனுக்கு டெல்லியில் மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என்றும்அதன்பின்னரேஅவர் போர் விமானம் இயக்க அனுமதிக்கப்படுவார் என்றும் டெல்லிவட்டார தகவல்கள்தெரிவிக்கின்றன.