கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள புகழ் பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் 40 லட்சம் பெண்கள் கலந்து கொண்ட பொங்கல் வைபவம் நேற்று நடைபெற்றது.
கோவிலில் அமைந்துள்ள பண்டார அடுப்பு எனப்படும் பிரதான அடுப்பில் கோவில் தந்திரி, தீ பற்ற வைத்து பொங்கல் வைபவத்தை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து திருவனந்தபுரம் மாநகரை சுற்றிலும் 14 கிலோ மீட்டர் தொலைவுக்கு பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு மேற்கொண்டனர்.
புராண காலத்தில் நீதி தவறிய மதுரையை சினம் கொண்ட பார்வையால் தீக்கிரையாக்கிய கண்ணகிதேவி அங்கிருந்து திருவனந்தபுரம் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆற்றுக்கால் பகுதியில் வந்து அமர்ந்ததாகவும், அங்கு கோவில் அமைத்து கேரளா மக்கள் கண்ணகி தேவியை பகவதி அம்மனாக பாவித்து வணங்கி வருகின்றனர் எனவும் கூறப்படுகிறது.
மன்னர் காலம் தொட்டு புகழ் பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறும் பொங்கல் வைபவம் உலக பிரசித்தி பெற்றது. கடந்த 1997ஆம் ஆண்டு 15 லட்சத்துக்கும் மேலான பெண்கள் கலந்து கொண்ட பொங்கல் வைபவம் முதல் முறையாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து. அதனை தொடர்ந்து 2003, 2017ஆம் ஆண்டு நடந்த பொங்கல் விழாவில் முந்தைய சாதனையை முறியடித்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது, இதன் தொடர்ச்சியாக இந்தவருடத்திற்கான உலக பிரசித்தி பெற்ற பொங்கல் வைபவம் நேற்று நடைபெற்றது.
அதன் படி பகவதி அம்மன் கோவிலில் 40 லட்சத்திற்கும் மேலான பெண்கள் வைபவத்தில் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து திருவனந்தபுரம் மாநகரை சுற்றிலும் 14 கிலோ மீட்டர் தொலைவுக்கு பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு மேற்கொண்டனர். விழாவில் கேரளாவைச் சேர்ந்த பிரபல திரைப்பட நட்சத்திரங்கள், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தீப்பாய்ந்தாள் அம்மன் ஆலயத்தில் தீ மிதித் திருவிழா