டெல்லியில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக நிதி ஆயோக் அறிவுறுத்தலின்படி, டெல்லி அரசு ஆரோக்கிய சேது செயலியை ஐ.டி.ஐ.ஹெச்.ஏ.எஸ். என்ற சிறப்பு தொழில்நுட்பத்துடன் இணைத்து கரோனா பரவலை மாவட்டம் வாரியாக கண்காணிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
அந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் 300 மீட்டர் தொலைவில் இருக்கும் நபருக்கு தொற்று இருந்தால்கூட கண்டறிய முடியும் எனக் கூறப்படுகிறது.
அதனால் டெல்லியில் உள்ள அனைத்து மாவட்டங்களின் தலைமை சுகாதார அலுவலர்களுக்கு இது குறித்து டெல்லி அரசு அறிக்கை அனுப்பியுள்ளது.
ஐ.டி.ஐ.ஹெச்.ஏ.எஸ். தொழில்நுட்பத்தை இயக்க, தொற்று நோயியல் வல்லுநர், தொழில்நுட்ப வல்லுநர் ஆகியோர் நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அச்சுறுத்தும் தொற்று நோய்களின் முகம்