புதுச்சேரி ஆம் ஆத்மி கட்சி தொழிற்சங்க தலைவர் மணிமாறன் என்பவர் தன்னை போராளி இயக்கத்தினர் சிலர் மிரட்டுவதாகக் கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்துள்ளார்.
ஆனால் காவல் துறையினர் சரியான முறையில் புகாரை விசாரிக்காததால் டிஜிபி அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த மணிமாறன் திடீரென்று தன்மீது மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
உடனே அங்கிருந்த பாதுகாப்பு காவலர்கள் அவரை மீட்டு விசாரணை நடத்திவருகின்றனர். மாநிலத்தின் காவல் தலைவர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயற்சி செய்த நபரால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.