மத்திய மோடி அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து போராடிவருகின்றனர்.
நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதி வழியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆம் ஆத்மி அரசு பல்வேறு உதவிகளைச் செய்துவருகிறது.
ஆனால் மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் விவசாயிகள் நாளை (டிச.8) நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர். இப்போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி முழு ஆதரவு அளித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகள், தன்னார்வலர்கள் அனைவரும் நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்க வேண்டுமென கட்சியின் தென்னிந்திய பொறுப்பாளரும் டெல்லி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான சோம்நாத் பார்தி அறிவித்துள்ளார்.