கரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போக்குவரத்துத் துறை பெரும் நிதிச்சுமையை சந்தித்தது. இதற்கிடையே, கோஏர், ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்கள் நிலுவையில் உள்ள தொகையை செலுத்திவிட்டு விமான சேவையை தொடங்கிக் கொள்ள இந்திய விமான போக்குவரத்து ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏர் நேவிகேஷன், தரையிறக்கம் உள்ளிட்ட சேவைகளை மேற்கொள்வதற்காக இந்திய விமான போக்குவரத்து ஆணையத்திற்கு விமான நிறுவனங்கள் தொகை செலுத்த வேண்டும். ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 122 கோடி ரூபாய் நிலுவைத் தொகையும் கோஏர் நிறுவனம் 52 கோடி ரூபாய் நிலுவைத் தொகையும் செலுத்த வேண்டும். கோஏர், ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்கள் இந்திய விமான போக்குவரத்து ஆணையத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.
கரோனா பெருந்தொற்று காரணமாக இந்திய விமான போக்குவரத்து ஆணையம் கடும் நிதிச்சுமையில் உள்ளன. நிலைமை சமாளிக்கும் நோக்கில் ஆணையம் 1000 கோடி ரூபாய் கடன் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: வேலை வாங்கித் தருவதாக லட்சக்கணக்கில் பண மோசடி செய்த கும்பல்!