ETV Bharat / bharat

'ஆதலால் காதல் செய்வீர்' - காதலும்; காதலர் தினமும்!

உலகெங்கிலும் உள்ள அனைத்து உயிருள்ள ஜீவன்களுக்கும் பொதுவானதாக அமைந்திருக்கும் 'காதல்' என்கிற மந்திரச் சொல்லைக் கொண்டாடும் நாளாக 'பிப்ரவரி 14' திகழ்கிறது.

Valentine
Valentine
author img

By

Published : Feb 13, 2020, 11:53 PM IST

'காதல்' என்பது வெறும் சொல் என்பதைவிட, அது ஒரு வாழ்வியல் என்பதே மெய். அந்த வாழ்வியலைக் கடக்காத மனிதர்களே இல்லை எனக் கூறலாம். இல்லை, இல்லை... காதலே செய்திடாத சிலரும் இருக்கிறார்கள் என்கிறீர்களா? ஆம், காதல் செய்துவிடக்கூடாது என்பதில் அவர்களுக்குக் காதல்.

இப்படி மனிதர்களின் வாழ்வோடு ஒன்றாகப் பிணையப்பட்டிருக்கும் காதலுக்கு சாதி, மதம் என எந்த எல்லைகளும் கிடையாது. அத்தனைக்கும் அப்பாற்பட்டதுதான் காதலாக இருக்க முடியும்.

காதலர்கள்
காதலர்கள்

தாய் தன் மகன் மீதும், மகன் தன் தாய் மீதும் செலுத்திடும் அன்பில், தந்தை தன் குடும்பத்தை நிலை நிறுத்திட சிந்துகின்ற வியர்வைத் துளிகளில், தாத்தா தன் பேரக் குழந்தையின் வளர்ச்சியைக் கண்டு உணர்ச்சிவசப்படுகையில் வெளியாகும் கண்ணீர்த் துளிகளில், பிரசவத்திற்கு மனைவியை உள்ளே அனுப்பிவிட்டு வெளியில் காத்திருக்கும் கணவனின் இதயத் துடிப்பில், அழகியக் குழந்தையைப் பெற்றெடுத்த பின்னர் தாயின் முகத்தில் வரும் புன்சிரிப்பில், முன் பின் தெரியாதோருக்கு செய்திடும் சிறிய உதவியின் விளைவாக உண்டாகும் ஆனந்தத்தில், வெறுப்பை மட்டுமே உமிழ்ந்து பழகுவோரிடத்திலும் பணிவு காட்டிடும் மாண்பில் என இந்த பூவுலகம் முழுவதும் காதல் நிறைந்திருக்கும் இடங்கள் எண்ணில் அடங்காதவை.

"காதலினால் மானுடர்க்கு கலவி யுண்டாம்

கலவியிலே மானுடர்க்கு கவலை தீரும்

காதலினால் மானுடர்க்கு கவிதை யுண்டாம்

கானமுண்டாம் சிற்பமுதற் கலைகளுண்டாம்

ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே!" - என்று மகாகவியால் போற்றப்பட்டது காதல்.

"யாயும் ஞாயும் யாராகியரோ?

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?

யானும் நீயும் எவ்வழி அறிதும்?

செம்புலப் பெயல் நீர் போல

அன்புடை நெஞ்சம்தாங் கலந்தனவே!" என்கிற குறுந்தொகை பாடலில் ஒளிந்திருக்கும் வாழ்வியலுக்கு ஈடு இணையேதும் இருக்க முடியுமா என்ன? இப்படி தமிழர்களின் வாழ்வோடும், அவர் தம் நாகரிகத்தோடும் பின்னிப்பிணைந்திருப்பது 'காதல்' என்கிற மந்திரச் சொல்.

காதலர் தினம்
காதலர் தினம்

நம்மில் பலருக்கும் இரவு உறங்கச் செல்வதற்கு முன், அன்றைய நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகள், அலுவல் ரீதியிலானவையாக இருந்தாலும் சரி; தனிப்பட்ட சந்திப்புகளாக இருந்தாலும் சரி நினைவுகளில் வந்துசெல்வது இயல்பான குணமாக இருக்கக்கூடும். ஒருசிலர் அதனை தாமாகவே செய்வர், ஒரு சிலருக்கு அதுவாகவே நேரும்.

அப்படி யோசித்துப் பார்க்கையில், அந்த நாளில் நீங்கள் யார் மீதோ செலுத்திய அன்போ அல்லது யாரோ உங்கள் மீது செலுத்திய அன்போ உங்களின் நினைவுக்கு வருகிறதா, நீங்கள் காதலிக்கப்படுகிறீர்கள். காதலிக்கிறீர்கள்.

ஏனெனில், இந்த பூமி காதலால் கட்டப்பட்டது. அந்தக் காதல் ஏதேனும் ஒரு ரூபத்தில் உங்களுக்குக் கிடைத்துக்கொண்டே இருக்கும். நீங்கள் யாருக்கேனும் கொடுத்துக் கொண்டே இருப்பீர்கள்.

சிலருக்கு எழுத்து மீது காதல் இருக்கலாம். சிலருக்குப் பாடல்கள் மீது இருக்கலாம். சிலருக்கு தான் செய்யும் வேலை மீது இருக்கலாம். ஏதோ ஒன்று... நம்மை ஏதோ ஒன்றினை செய்யத் தூண்டிக்கொண்டே இருக்கும். அந்த உந்துசக்திக்கு காதல் என இன்னோர்ப் பெயரும் உண்டு, உணர்ந்திடுக.

காதலர்கள்
'காதல்' உணரப்படவேண்டியது, உணர்த்தவேண்டியது அல்ல!

இவற்றையெல்லாம் கடந்து இரு உள்ளங்களுக்கு இடைப்பட்ட காதலில் இருக்கீர்களா? இருந்தீர்களா? இரண்டுமே இரு வேறு விதங்களில் அனுபவங்கள் தான். இதில் திருமணத்தில் இணைந்த காதல் ஒருபுறம் மகிழ்ச்சியைத் தரும் புத்துணர்வாக இருப்பினும், இழந்த காதலும் பிரிந்த உள்ளங்களும் தாளாத துயருடன் தவிக்கத்தான் செய்கின்றன. ஏன் தவித்துக்கொண்டுதான் இருக்கின்றன. அந்த வலி கூட காதலின் வெளிப்பாடுதானே...

இருப்பினும், அவர்களுக்குக் காதல் வலியாக இருப்பதில்லை, அதைச் சேர விடாமல் தடுத்த சமூகத்தின் மீதுதான் ஒட்டுமொத்த வருத்தமும் விரவிக்கிடக்கிறது.

இப்படி பல சிறப்புகள் நிறைந்த காதலை போற்றும் விதமாகவும், காதலை நினைவுகூரும் விதமாகவுமே, பிப்ரவரி 14ஆம் தேதியான இன்று உலக காதலர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. காதல் செய்திடுவோம், காதலைப் போற்றிடுவோம்! அனைவருக்கும் காதலர் தின நல்வாழ்த்துகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.